Dress Code -ஐ மாற்றினார்! "நண்பர் அஜித்" போல்! கோட் சூட்டில் முதல்வராக பதவியேற்கிறார் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வராக பொறுப்பேற்க வந்துள்ள விஜய் வெள்ளை நிற முழுக்கை சட்டையையும் கருப்பு பேன்ட்டையும் கோட் சூட் அணிந்து கொண்டு நேரு ஸ்டேடியத்திற்கு வந்திருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் முதல்வராக பதவியேற்கிறார். அவரது வருகையை பார்த்த கட்சியினர் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

தமிழகத்தின் முதல்வராக விஜய் இன்று நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்றுக் கொள்கிறார். மே 13 -ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார்.

vijay tvk

இன்றைய தினம் விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், பி வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்கிறார்கள்.

பொதுவாக முதல்வர்கள் வேட்டி சட்டையில் பதவியேற்பது வழக்கம். ஆனால் விஜய் அந்த டிரென்ட்டை மாற்றி வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்திருந்தனர்.

உடை என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அந்த வகையில் விஜய் அணிந்திருக்கிறார். நேரு ஸ்டேடியத்திற்கு வந்திருந்த விஜய்யை டிஜிபி சந்தீப் ராய் , தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கும் விழாவுக்கான பிரமாண ஏற்பாடுகள் நேற்று இரவு முதல் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்து வந்தன. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதற்காக கவர்னர் ஐ என ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணத்தை தொடங்கி வைப்பார். விஜய் தமிழில் சி.ஜோசப் விஜய் எனும் நான்.. என்று உறுதிமொழியை வாசிப்பார். அது போல் ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் தொடங்கி வைக்க விஜய் அதை தொடர்ந்து படிப்பார்.

விஜய் வாயில் இருந்து ஒலிக்க போகும் இந்த வார்த்தைக்காக விஜய் ரசிகர்களும் , தவெக தொண்டர்களும் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். அவர்களதசு கனவு இன்று நிறைவேர போகிறது. விஜய்யை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்பு உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியை வாசிப்பார்கள்.

இந்த விழாவுக்கு விஜய்யின் தாய் ஷோபா, தந்தை சந்திரசேகர் உள்ளிட்டோர் வந்திருக்கிறார்கள். அவரது மனைவி சங்கீதா, குழந்தைகள் யாரும் வரவில்லை. அது போல் இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கோட் சூட் அணிந்து கொண்டு வந்திருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்கள் கோட் சூட் குறித்து கேட்டனர். அதற்கு விஜய், "ஒவ்வொரு விழாவுக்கும் ரொம்ப சுமாராக உடையணிந்து சொல்கிறீர்கள் என காஸ்ட்டியூமர் பல்லவி இந்தக் கோட் கொடுத்தாங்க. சரி, நம்மளும் நண்பர் அஜித் மாதிரி கோட் போட்டுப் போவோம் என்று வந்தேன். நன்றாக இருக்கிறதா?" என்று பதிலளித்தார் விஜய்.

தவெகவின் பலம்: 108 இடங்கள் (தனிப்பெரும் கட்சி). ஒன்று நீங்கலாக 107

ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 118.

கூட்டணி கட்சிகளின் ஆதரவு: காங்கிரஸ் (5), விசிக (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2), மற்றும் ஐ.யூ.எம்.எல் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய்யின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+