ராஜ்ய சபா எம்பியாகிறாரா நடிகை திரிஷா? ஜெயலலிதா பாணியில் அரசியல் என்ட்ரி.. டெல்லி தவெகவின் முகம்!
சென்னை: தவெக சார்பாக நடிகை திரிஷா ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டெல்லியில் தவெக சார்பாக பேச்சுவார்த்தை நடத்த நம்பிக்கைக்குரிய நபராக திரிஷா இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு திரிஷாவின் சமூக பின்னணியும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை அமைத்துள்ளது. தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ளனர். அதிமுகவிலிம் எஸ்பி வேலுமணி தரப்பில் உள்ள 25 எம்எல்ஏ-க்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

இந்த நிலையில் தவெக தரப்பில் டெல்லியிலும் காய்களை நகர்த்த திட்டமிட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் 2029ல் நடப்பதால், அதுவரை மக்களவைக்குள் தவெக செல்ல வாய்ப்புகள் கிடையாது. ஆனால் ராஜ்ய சபாவில் தவெக தரப்பில் ஒரு உறுப்பினரையாவது கொண்டு செல்ல வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது.
ராஜ்ய சபா எம்பி
ஏற்கனவே அதிமுக சார்பாக மயிலம் தொகுதியில் வென்ற சிவி சண்முகம் ராஜ்ய சபா பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவில் இப்போது பிளவு ஏற்பட்டுள்ள சூழலில், மீண்டும் அதிமுக சார்பாக ராஜ்ய சபா எம்பி தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. இதனால் தவெக தரப்பில் ஒரு ராஜ்ய சபா எம்பியை அனுப்ப திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
ஒரு ராஜ்ய சபா உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்எல்ஏ-க்கள் வாக்களிக்க வேண்டும். இதனால் தவெக சார்பாக நடிகை திரிஷா ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்படலாம் என்று சில தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், டெல்லியில் தங்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடத்த ஒரு பிரிவை உருவாக்கும்.
டெல்லி முகம்
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முரசொலி மாறன் இருந்தார். அதேபோல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-க்கு ஜெயலலிதா இருந்தார். 1984ல் ஜெயலலிதா ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தபோது, பேரறிஞர் அண்ணா அமர்ந்த 185-ம் எண் இருக்கை ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டது. அதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கு தம்பிதுரை மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் இருந்தனர். ஸ்டாலினுக்கு டிஆர் பாலு, கனிமொழி இருந்தனர்.
அந்த வகையில் விஜய்க்கு நம்பிக்கையாக நடிகை திரிஷா இருந்து வருகிறார். இதனால் தவெக தரப்பில் நடிகை திரிஷா ராஜ்ய சபாவுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு முன் நடிகை திரிஷாவுடன் தவெக தலைவர் விஜய் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒரே டிசைனில் ஆடை அணிந்து பங்கேற்றார். தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான போதும், விஜய் வீட்டிற்கு திரிஷா வந்தார்.
விஜய் - திரிஷா
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற போதும், அந்த நிகழ்ச்சியில் திரிஷா பங்கேற்றார். ஏற்கனவே திரிஷாவும் அரசியலில் ஆர்வம் இருப்பதாக கூறி இருக்கிறார். வழக்கமாக தங்களுக்கு நம்பிக்கையாக இருக்கும் நபர்களையே முக்கிய பொறுப்புகளில் கட்சித் தலைவர்கள் அமர்த்துவார்கள். தமிழக அரசின் தலைமை கொறடாவாக சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் விஜய்யின் கார் ஓட்டுநரின் மகன். விஜய் நடத்தும் நிறுவனத்தின் பங்குதாரராகவும் சபரிநாதன் இருக்கிறார். அதேபோல் டெல்லிக்கு தனக்கு நம்பிக்கையாக இருக்கும் திரிஷாவை அனுப்ப விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நடிகை திரிஷாவும் புதிய படங்களை கமிட் செய்து கொள்ளவில்லை. இதனால் விரைவில் திரிஷாவின் அரசியல் என்ட்ரி இருக்கும் என்று கருதப்படுகிறது.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி












Click it and Unblock the Notifications