வாழ்விழந்த தலைகளுக்கு வாழ்வளிக்கும் விஜய்! ஸ்ட்ரிக்ட் எடப்பாடி.. கதவை சாத்திய ஸ்டாலின்! பரபர பனையூர்
சென்னை: செங்கோட்டையன் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் சேர்ந்த பிறகு பெரிய அளவிலான அரசியல் தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் சேரவில்லை. அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டவர்களும், திமுகவில் சேர்க்க முடியாது என மறுக்கப்பட்டவர்களும் தமிழக வெற்றிக்கழகத்தை நோக்கி பயணிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் மீது அதிருப்தியில் இருக்கும் சில நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு தாவ இருப்பதாக சொல்கின்றனர்.
தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் கட்சி ஆரம்பிக்க போவதாக சொன்னதிலிருந்து, கரூர் சம்பவம் வரை பல்வேறு கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. சொல்லப்போனால் இன்னும் விஜய் சுற்றி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது என்னவோ உண்மைதான்.
காரணம் அரசியல் கட்சியை ஆரம்பித்து விட்டாலும் தொண்டர்களை அரசியல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு விஜய் மீது வைக்கப்படுகிறது. மேலும் முழுமையான அரசியல் கட்சியாக இன்னும் தமிழக வெற்றிக் கழகம் மாறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

விஜய் அரசியல் கட்சி
பெரும்பாலான மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தாலும், அதற்கு அடுத்த கட்டமாக மாநகர், நகர், ஒன்றியம், பேரூர், கிளை வரையிலான நிர்வாகிகள் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. பூத் கமிட்டி அமைக்கப்பட்டதாக சொன்னாலும் இதுவரை பெரும்பாலான மாவட்டங்களில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என தமிழக வெற்றிக்கழகத்தினரே ஒப்புக்கொள்கின்றனர்.
தமிழக வெற்றி கழகம்
இதனால், கூட இருக்கும் நபர்களை வைத்து ஒன்றும் செய்ய முடியாது எனவும் பல்வேறு கட்சிகளில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து வரவேண்டும் என விஜய் உத்தரவிட்டார். அதில் முதல் நபராக செங்கோட்டையன் வந்தார். அதற்குப் பிறகு நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் வந்தனர். வைத்திலிங்கம் வருகிறார், தங்கமணி வருகிறார் என தவெக தரப்பு கிளப்பிவிட்டுள்ள நிலையில் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில் தற்போதும் அதிமுக தரப்பிலும் சில கட்சிகளில் இருக்கும் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாவல்
அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தான் அதிக அளவில் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி வருவார்கள் என சொல்லப்படுகிறது. அதிமுகவிலும் சேர முடியாது, திமுகவிலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என முடிவெடுத்த ஓபிஎஸ் தரப்பினர் தற்போது தமிழக வெற்றி கழகத்தை நோக்கி பயணிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்து வெளியேறிய வைத்தியலிங்கம் உள்ளிட்ட சிலரும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களும் தமிழக வெற்றி கழக தரப்புக்கு வரலாம் என்கின்றனர்.
தவெக
அதிமுகவில் இருந்தபோதும் தங்களால் ஒன்றும் செய்யவில்லை செய்ய முடியவில்லை. கட்சி ஆரம்பித்து என்ன செய்யப் போகிறீர்கள் என ஓபிஎஸ்ஸை நோக்கி கேள்வி எழுப்பும் அவர்கள் தங்களது கடைசி ஆயுதமாக தமிழக வெற்றிக் கழகத்தை தான் நம்பி இருக்கிறார்கள் என்கிறார். இன்னும் சில நாட்களில் ஓபிஎஸ் அணியிலிருந்து தமிழக வெற்றிக் கழக தரப்புக்கு வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.
எடப்பாடி - ஸ்டாலின்
அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து விலகிய முக்கியமான சில நிர்வாகிகள் கடைசியாக எடப்பாடி இடம் பேசி பார்ப்போம் அல்லது திமுக தரப்பில் பேசுவோம் என தயக்கம் காட்டி வருகிறார்களாம். முன்னாள் அமைச்சர்களாக இருந்த சிலரும் அதனால்தான் இதுவரை வெற்றிக் கழக தரப்பில் இணையவில்லை எனவும், திமுகவின் அழைப்புக்காக காத்திருப்பதாகவும், அங்கு அழைப்பு வரவில்லை என்றால் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என வெய்டிங்கில் இருப்பதாகச் சொல்கின்றனர்.
-
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
ஜனநாயகன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்.. ரஜினிக்கு பயந்து இந்த முடிவா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ












Click it and Unblock the Notifications