விஜய் வாங்கிய ப்ளாக் மணி? வாய் திறந்த தயாரிப்பாளர்! புலி டூ ரோல்ஸ் ராய் வரை வரி ஏய்ப்பு குட்டி ஸ்டோரி
சென்னை: ஊழலை 100% ஒழிக்க வேண்டும் என விஜய் பேசி இருந்த நிலையில், சமூக ஊடகங்களில் விஜய் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாகக் காரசாரமான விவாதம் நடந்துவருகிறது.
விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் பேசிய விஜய் ஊழல்வாதிகள் என நேரடியாக திமுகவை விமர்சித்திருந்தார். மதவாதம் கொள்கை எதிரி என்றும் அரசியல் எதிரி திமுக என்று பேசி இருந்தார். விஜய் மாநாட்டில் பேசுகையில், "நமக்கு ஒரே ஒரு எதிரிதானா? நமக்கு இன்னொரு கோட்பாடு இருக்கே? ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம். அதை எதிர்க்க வேண்டாமா? ஊழல் வைரஸ் மாதிரி வாழ்க்கையில் மறைந்து கிடக்கிறது.

இந்தப் பிளவுவாத சக்திகளைக் கூட ஈசியாக கண்டுபிடித்துவிடலாம். அது மதம் பிடித்த யானை மாதிரி. ஆனால் இந்த கரப்ஷன் இருக்கே.. அது எங்கே ஒளிந்துள்ளது? எப்படி ஒளிந்துள்ளது என்று கண்டே பிடிக்கமுடியாது. 100% ஊழலை ஒழிக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், ஒழித்துத்தான் ஆகவேண்டும்" என்றிருந்தார்.
அதைக் கேட்ட உடன்பிறப்புகள் இப்போது விஜய்யை சமூக ஊடகத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள். பிகில் படத்தில் நடித்திருந்த விஜய், அப்போது வாங்கிய சம்பளம் தொடர்பான கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. அப்போது அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்தனர். அது தொடர்பாக மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டில் நடந்த சோதனையில் பிகில் படத்திற்கு 50 கோடி மாஸ்டர் படத்திற்கு 80 கோடி சம்பளம் பெற்றது தெரியவந்தது.
உடனே நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் காரில் ஊடகங்களைப் பார்த்ததும் முகத்தை மூடிக் கொண்டார். அது தொடர்பான வீடியோவைப் போட்டு கேள்வி எழுப்பிவருகின்றனர். அதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு புலி படத்திற்காக வாங்கிய சம்பளத்தை கணக்கில் காட்டாமல் 5 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருந்தார் என்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். ஆகவே, வருமானவரித்துறை அதிகாரிகள் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியனர்.

அதாவது காம்பவுண்டிங் டேக்ஸ் செலுத்திய ஒருவர், அடுத்த முறை மறுபடியும் வரி ஏய்ப்பு செய்தால் அவரை சிறைக்கு அனுப்ப முடியும். இந்த வாய்ப்பு விஜய்க்கு இளம் வயதிலேயே முடிந்துவிட்டது. அதாவது அவர் முன்பே சட்டத்தை மீறியிருந்தார். இதனால் புலி பட விவகாரத்தில் சிக்கிய அவர் 2017 ஆம் ஆண்டு 1.5 கோடி அபராதம் கட்டினார். விஜய் 5 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக ஐடி அதிகாரிகள் அப்போது தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் புலி படத்தின் தயாரிப்பாளர் பிடி செல்வக்குமார் வீட்டில் ரெய்டு நடந்தது. அப்போது அவர் பயந்து போய் பாஜகவில் சேர்ந்தார்.
அடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டி விஜய் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். செப்டம்பர் 2021 இல் நுழைவு வரியாக ரூ.7,98,075 விஜய் செலுத்தி இருந்தார். பின்னர் வணிக வரித்துறை டிசம்பர் 2005 முதல் செப்டம்பர் 2021 வரை வரி செலுத்தாததற்காக ரூ. 30,23,609 அபராதம் கோரியது. வரி அதிகம் உள்ளதாக விஜய் வழக்குப் போட்டார்.
மீண்டும் உச்சநீதிமன்றம் போனார். உச்சநீதிமன்றம் வரியைக் கட்ட வேண்டி வலியுறுத்தி இருந்தது. இது தொடர்பாக விஜய் வழக்கறிஞர் குமரேசன், "சென்னை நீதிமன்றம் 20% வரியைக் கட்டவேண்டும் என்றது. உச்சநீதிமன்றம் வரி கட்டிதான் ஆகவேண்டும் என்று சொன்னதால் வரியைக் கட்டினோம்" என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்குத் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தார். 2 வாரத்திற்குள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றவர் ரீல் ஹீரோ அல்ல நிஜ ஹீரோவாக இருங்கள் என்று தீர்ப்பில் அறிவுரை கூறியிருந்தார்.
அதேபோல பிப்ரவரி மாதம் 2020இல் 18 மணிநேரம் வருமான வரித்துறை விஜய் வீட்டில் சோதனை நடத்தியது. பிகில் படத்தில் நடித்ததற்காக 30 கோடி சம்பளம் பெற்றது தெரியவந்தது. உடனே பாஜகவை விமர்சித்ததால் இந்தச் சோதனை நடந்துள்ளது என ஊடகங்களில் சிலர் பேசினர். ஆனால், மாலன் அப்போது சூர்யா போன்றவர்கள் மத்திய அரசை நீட், புதிய கல்விக் கொள்கை போன்ற விசயங்களில் எவ்வளவோ விமர்சித்து வருகின்றனர். அவர்கள் வீட்டில் ரெய்டு நடக்கவில்லை என்று சொல்லி இருந்தார்.

இவற்றை எல்லாம் தாண்டி சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. சில ஆண்டுகள் முன்பாக நக்கீரன் யூடியூபில் பேட்டி அளித்த தலைவா படத்தின் இயக்குநர் விஜய்யின் அப்பா ஏ எல் அழகப்பன் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் படத்திற்கு விஜய்க்கு தான் எவ்வளவு சம்பளம் அளித்தேன் என்பது வெளி உலகத்திற்குத் தெரியாது என்று பேசி இருந்தார். இதுதான் விஜய் ஊழலை ஒழிக்கும் விதமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரோல்ஸ் ராய் கார் விவகாரத்தில் சிலர் கவனிக்கத் தவறிய விசயம் ஒன்று உள்ளது. இந்த கார் இங்கிலாந்து கம்பெனியை சேர்ந்தது. அதிலிருந்து நேரடியாக விஜய் தன் காரை இறக்குமதி செய்யவில்லை. பிஎம்டபுள்யூ தான் அந்தக் காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அதன் கிளை மீனம்பாக்கத்தில் உள்ளது. அதிலிருந்துதான் விஜய் அந்தக் காரை வாங்கி இருந்தார்.
பலரும் நேரடியாகக் காரை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்ததாகச் சொல்கின்றனர். அது தவறான தகவல். மேலும் இந்த 2023- 2024 ஆம் ஆண்டுக்கான வருமான வரியைக் கட்டிய நட்சத்திரங்களில் அதிக தொகையை வரியாகச் செலுத்தியவர்கள் பட்டியலில் விஜய் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். அதையும் கணக்கில் எடுத்துப் பேச வேண்டும் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
-
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா?











Click it and Unblock the Notifications