Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொட்டுக்கூட திமுகவை பார்க்க முடியாது.. குதிரைக்கு லாடம் கட்டினது மாதிரி விஜய் பண்ண வேண்டியது இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவினர் இன்றைய சூழலில், வெறிகொண்ட செய்ய வேண்டியது, எஸ்ஆரில் தங்களது பெயரை சேர்ப்பதுதான்.. விஜய்யை ஆதரிக்க கூடியவர்கள் எத்தனை பேருக்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.. அப்படி பெயர் இல்லாவிட்டால் அதை சேர்க்கும் வேலையில் முதலில் இறங்க வேண்டும்" என்று ஒரு பேட்டியில் தன்னுடைய கருத்தை சொல்லி உள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.

The Debate என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்து மூத்த பத்திரிகையாளர் மணி, விஜய் இன்று கவலைப்பட வேண்டிய ஒரே விஷயம், எஸ்ஐஆரில் அவரது ஆதரவாளர்களை வாக்காளர்களாக சேர்க்க வேண்டும்.. குதிரைக்கு லாடம் கட்டினதுபோல, தவெகவினர் கவனம் செலுத்த வேண்டியது இது ஒன்றில் மட்டும்தான்..

DMK Vijay TVK

விஜய்க்கு வரக்கூடிய கூட்டம் ஆதரவாக மாறுமா என்று பலரும் கேட்கிறார்கள்.. முதலில் இந்த கேள்வியே தவறானது.. அபத்தமானது.

Zen-C கேட்டகிரி

விஜய்க்காக கூடும் கூட்டத்தில் எத்தனை பேருக்கு ஓட்டு உள்ளது? என்பது தெரியவில்லை.. Zen-C கேட்டகிரியில் இன்று பலர் இருக்கலாம்.. ஓட்டுரிமை என்பது அவரவர் உரிமை.. எனினும், எஸ்ஐஆர் வந்தபிறகு, ஓட்டுரிமை உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.. "சார்" பற்றி கவலைப்பட்டாக வேண்டும்.

பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. வெறும் கோபம் மட்டுமே இருந்தால் போதாது, புத்தி தேவை.. இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கலையே? அரசியல் களத்தை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள்?

விஜய் செய்ய வேண்டியது

இனிமேல் வெறிகொண்டு செயல்பட போவதாக சொல்கிறார்கள்.. தவெகவினர் வெறிகொண்ட செய்ய வேண்டியது, எஸ்ஆரில் பெயரை சேர்ப்பதுதான்.. விஜய்யை ஆதரிக்க கூடியவர்கள் எத்தனை பேருக்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.. அப்படி இல்லாவிட்டால் அதை சேர்க்கும் வேலையில் இறங்க வேண்டும்.

திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று வெறுமனே சொன்னால் போதாது? ஓட்டு போட்டுத்தான் திமுகவை தோற்கடிக்க முடியும்.. நிறைய கண்டிஷன்கள் தற்போது வந்துள்ளதால், என்ன குளறுபடி ஆக போகிறதென்றே தெரியவில்லை.

திமுகவை எடுத்துக் கொண்டால், அதை எதிர்த்து சட்டரீதியாக போராடி கொண்டிருக்கிறார்கள்.. அரசியல் ரீதியாக வருகிற 11ம் தேதி தெருவில் இறங்கியும் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்த போகிறார்கள்.. ஆனால் அதே நேரத்தில் Help Desk என்று ஒன்றை நியமித்து, SIR-ல் பெயர் சேர்ப்பதை பற்றியும் ஆலோசனை சொல்கிறார்கள்.. ஒரு அரசியல் கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு திமுக ஒரு உதாரணம்..

தமிழக அரசின் வார் ரூம்

ஒரு விஷயத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும், அதை சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், எதிர்க்கிறது திமுக.. வழக்கறிஞர் டீமுக்கு அறிவுறுத்த ஒரு டீம் வைத்துள்ளது திமுக.. தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு அட்வைஸ் செய்வதற்காகவும் ஒரு டீம் வைத்துள்ளது.. பொதுமக்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றாலும், வார் ரூமுக்கு போன் செய்து தெளிவு பெற்றுக் கொள்ளலாம்..

தம்பிமார்கள், தங்கைமார்கள்

தமிழக அரசின் செயல்பாடு இவ்வாறிருக்க, விஜய் கவலைப்பட வேண்டியது SIR பற்றிதான்.. வாக்காளர் பட்டியலில் தன்னுடைய தம்பிமார்களும், தங்கைமார்களும் உள்ளனரா என்பதை விஜய் உறுதிப்படுத்த வேண்டும்.. இதைவிட்டுவிட்டு வேறு விஷயங்களை பேசிக் கொண்டிருந்தால், அடிப்படையை விட்டுவிட்டார்கள் என்று அர்த்தம்.. வருமுன் காப்பதே அழகு.

திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் ஒரு திருமண விழாவில் பேசும்போது, "கழகத்தை ஒழிக்கிறேன் என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள்.. திமுகவை யாரும் தொட்டுப்பார்க்க முடியாது" என்று பேசியிருக்கிறார்..

முதல்வர் பேச்சை ஏற்கிறேன்.. திமுக 75 வருட கட்சி.. எப்போதுமே பெரிய ஸ்தாபனங்கள், உள்முரண்பாடுகளால் தான் வீழுமே தவிர, வெளியே வரக்கூடிய தாக்குதல்களால் விழாது..

திமுகவை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது, ஆனால் திமுககாரரர்களாலேயேதான் வீழ்த்திக் கொள்ள முடியும்.. எனவே தவெகவால் திமுகவை அழிக்கவே முடியாது, வேண்டுமானால் தலைவலி உண்டுபண்ணலாம், ஓட்டுவங்கியை ஓரளவு இடமாற்றம் செய்யலம், ஆனால் திமுகவை அழிக்கவே முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+