இன்னும் திருந்தல பாஸ்.. விஜய் அவ்வளவு சொல்லியும் கேட்காமல்.. காரை சேஸிங் செய்த தவெக தொண்டர்கள்
காஞ்சிபுரம்: விஜய் இன்று காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்து பேசினார். இதற்காக காரில் சென்ற விஜய்யை பின் தொடர்ந்தபடியே தவெக கொடியை பிடித்தபடி சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். கரூர் கூட்டநெரிசல் சம்பவமே இன்னும் ஆறாத வடுவாய் உள்ள நிலையில் தொண்டர்கள் சிலர் இப்படி ஆபத்தான முறையில் விஜய்யை பின் தொடர்ந்து சென்றது விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே இந்த சம்பவம் உலுக்கியது. இதையடுத்து தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை விஜய் ஒத்திவைத்தார்.

காஞ்சிபுரத்தில் விஜய்
சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட 55 நாட்கள் ஆகியுள்ள நிலையில், மீண்டும் இன்று தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கினார். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் உள்ள உள்ளரங்கத்தில் பொதுமக்கள் சுமார் 2000 பேரை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் விஜய் பேசினார். இந்த மக்கள் சந்திப்பில் பங்கேற்க வரும் பொதுமக்கள் சிறப்பு வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.
விஜய் காரை சேஸிங் செய்த தவெகவினர்
குழந்தைகளுடன் வந்தவர்களை தவெகவினர் திருப்பி அனுப்பினர். கியூ ஆர் கோடுடன் கூடிய கார்டு வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், திமுகவை கடுமையாக அட்டாக் செய்தார். முன்னதாக விஜய் தனது பிரசாரத்திற்காக பனையூரில் இருந்த இல்லத்தில் இருந்து ரேஞ்ச் ரோவர் காரில் புறப்பட்டார்.
விஜய் காரில் சென்றதை பார்த்த சில தவெகவினர், அவரது காரை பின் தொடர்ந்து ஆபத்தான முறையில் சேசிங் செய்தனர். குறிப்பாக விஜய் காரை பின் தொடர்ந்து காரில் சென்ற இளைஞர்கள் சிலர், தவெக கொடியை காருக்கு வெளியே காட்டியபடி மற்றவருக்கும் இடையூறு அளிக்கும் விதமாக ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
தவெக தொண்டர் படை
கரூர் சம்பவத்திற்கு பிறகு, மீண்டும் அத்தகைய அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைத்த விஜய், கட்சியினர் சிலருக்கு சிறப்பு பயிற்சி அளித்து தவெக தொண்டர் படையையும் ஏற்படுத்தியுள்ளார். கட்டுப்பாட்டுடனும் தவெகவினர் செயல்பட வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும் விஜய் பேச்சை கேட்காமல் தவெகவினர் சாலை விதிகளை மீறி அவரை பின் தொடர்ந்து வந்தனர். தற்போது கரூர் சம்பவத்திற்கு பிறகும் தவெக தொண்டர்கள் அதே போல, விதிகளை மீறி நடந்து கொள்ளும் காட்சிகள் மாறியபாடில்லை.
விஜய் பேச்சு
காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: நாம் ஆட்சிக்கு வந்தால்.. அதென்ன வந்தால், வருவோம். மக்கள் கண்டிப்பாக நம்மை வரவைப்பார்கள். மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி வரவைக்கத்தானே செய்வார்கள். அப்படி மக்களால் அமைக்கப்படப் போகிற நமது ஆட்சியில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அதற்கான தேர்தல் அறிக்கையில் விளக்கத்தை கண்டிப்பாக கொடுப்போம்.
ஆனால் அதற்கு முன்னாடி ஒரு சின்னதாக, லைட்டாக, நான் அதை கொஞ்சம் சொல்லணும்னு ஆசைப்படுகிறேன். எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்க வேண்டும். காரும் தான் லட்சியம். அதற்கான வசதி, வாய்ப்பை உருவாக்கும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சிக்கு வழியை உண்டாக்கணும்.
பாடத்திட்டத்தில் சீர்திருத்தம்
ஒவ்வொரு வீட்டில் இருக்கிற ஒவ்வொருவரும் மினிமம் டிகிரி படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு நிரந்தர வருமானம் கிடைக்கணும். அதற்கான வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதற்கு தகுந்த மாதிரி கல்வியில், பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அரசு ஆஸ்பத்திரிக்கு மக்கள் எல்லாரும் பயமில்லாமல் நம்பி போவது போல் மாற்ற வேண்டும்.
பருவமழை காலத்தில் ஏற்படுகிற வெள்ளத்தால் ஊரும் சரி, மக்களும் சரி, விவசாயமும் சரி பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு ரூ.4 ஆயிரம் கோடி திட்டம் ஒன்று ஒரு உருட்டு உருட்டினார்களே? அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லாமல், உண்மையான ஒரு பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். என்று கூறினார்.
-
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன தவெக.. சில நிமிடங்களில் வெளியான கரூர் ட்ரோன் காட்சி.. வசமாக மாட்டிய விஜய் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா? -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
சங்கீதாவால் வந்த சட்டச் சிக்கல்.. விஜய்யின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு? வெளியான ஷாக் பின்னணி! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
விஜய் குடுமி சங்கீதா கையில்.. தேர்தலிலேயே நிற்க முடியாது? எலக்சன் நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்! பரபர -
பாஜகவுடன் உறவு.. புஸ்ஸி ஆனந்தை கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா.. சங்கடத்தில் சென்னை தவெக நிர்வாகிகள்! -
கோலாட்டம் ஆடிய மாணவியின் வாயில் ’விசில்’.. அத்தனை பேர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி செய்த செயல்! -
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ்












Click it and Unblock the Notifications