2 அமைச்சர்கள் பதவி.. தவெக கூட்டணிக்கு வர பாமக வைக்கும் டிமாண்ட்.. விஜய்யின் கணக்கு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் மதிமுக மட்டுமே தவெகவுக்கு சாதகமாக பேசுவதாக முதல்வர் விஜய் நெருங்கிய வட்டாரத்திடம் வருத்தப்பட்டிருக்கிறார். இதனால் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வரலாமா என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளன. அதேபோல் பாமக தரப்பில் 2 அமைச்சர்கள் பதவிக்கு காய் நகர்த்தப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தவெக எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றி இல்லை என்றாலும், அவர்களின் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்த 5 தொகுதி இடைத்தேர்தலிலும் கட்டாயம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

Vijay Anbumani Ramadoss PMK

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை தவெக விரைவில் தொடங்க உள்ளது. இருப்பினும் இந்த தேர்தல் முடிவுகள் விஜய்க்கு சில பாடங்களை கொடுத்துள்ளது. மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று பிரம்மாண்டமாக 5 கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், 2 தொகுதிகளிலும் 2 நாள் பிரச்சாரம் செய்துதான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.

அதேபோல் திமுக எந்தக் கூட்டணியும் இல்லாமல் மீண்டும் அதே வாக்கு வங்கியை தக்க வைத்திருக்கிறது. மறுபுறம் அதிமுகவும் கூட்டணி இல்லாமல் கணிசமான வாக்குகளை கைப்பற்றி இருக்கிறது. இதனால் நல்ல வாக்கு வங்கி உள்ள ஒரு கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று விஜய் கருதி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மீது விஜய்க்கு வருத்தம் இருக்கிறது.

வைகோவை தவிர்த்து வேறு யாரும் தவெகவுக்கு ஆதரவாக பேசுவதில்லை என்று விஜய் கருதுகிறார். குறிப்பாக எஸ்ஐஆர் விவகாரத்தில் விசிக தொடர்ச்சியாக திமுகவுக்கு சாதகமான கருத்துக்களை முன் வைத்து வருகிறது. சிறுபான்மையினர் வாக்குகளும் இன்னும் முழுமையாக தவெக பக்கம் திரும்பவில்லை. ஆனால் மதுராந்தகம் தொகுதியில் பாமக ஒதுங்கி நின்றது தவெகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதனால் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வரலாமா என்று விஜய் ஆலோசித்திருக்கிறார். பாமக உடன் தவெகவின் வியூகப் புள்ளியும் பேச்சுவார்த்தை நடத்த, பாமக தரப்பில் 2 அமைச்சர் பதவிக்கு டிமாண்ட் வைக்கப்பட்டிருக்கிறது. இதனை கேட்டு கொண்ட விஜய், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இருப்பினும் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவை திரும்ப பெற்றால், உடனடியாக பாமகவை கூட்டணியில் சேர்க்கும் முடிவில் தவெக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+