பாஜக மறைமுக ஆட்சி செய்யக் கூடாது.. தவெக அரசுக்கு ஆதரவு ஏன்? காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார்!
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக மறைமுகமாக ஆட்சி செய்யக் கூடாது என்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் குழு தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்த நிலையில், மதச்சார்பற்ற 5 கட்சிகள் ஆதரவளித்துதான் தவெக அரசு பெரும்பான்மை பெற்றது என்றும் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். தவெக அரசுல்க்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் சட்டசபைக் குழு தலைவர் ராஜேஷ் குமார் உரையாற்றினார்.

அதில் ராஜேஷ் குமார் பேசுகையில், மக்களின் தீர்ப்பை நிலைநாட்ட வேண்டிய ஜனநாயக பொறுப்பு நமக்கு இருக்கிறது. அந்த பொறுப்பு உணர்வோடு தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது. தவெக 107 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் குறைவாக இருந்தது. இதனால் பின்னால் இருந்து சில முயற்சிகள் நடந்தன.
அதன் காரணமாகவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட 5 கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தது. இது அரசியல் லாபத்திற்கான ஆதரவு அல்ல. இது தமிழ்நாட்டில் பாஜகவின் மறைமுக ஆட்சியை அனுமதிக்க கூடாது என்று உறுதியின் அடிப்படையிலான ஆதரவு. தமிழ்நாடு மண் எப்போதும் வெறுப்பு அரசியலை ஏற்றுக்கொண்டதில்லை.
மொழி ஆதிக்கத்தையும், ஒரே கலாச்சார அரசியலையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதன் காரணமாக பாஜகவுக்கு இந்த சபையில் 1 உறுப்பினர் மட்டுமே கிடைத்திருக்கிறது. கல்வி இல்லாத குழந்தை இருக்க கூடாது, பசி இருந்தால் கல்வி பயில முடியாது என்று மதிய உணவுக்கு விதையாக இருந்தவர் காமராசர். பதவியில் இருந்த போதும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் காமராசர்.
மொழி ஆதிக்கம், மத மோதல், வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்காக ராகுல் காந்தி இந்தியா முழுக்க பயணம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் கொள்கையும் அதுதான். தமிழ்நாட்டின் சமூக ஒற்றுமையை சீர்குலைக்க எந்த சக்தியையும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்











Click it and Unblock the Notifications