'கடும் தண்டனை பெற்றுத் தரப்படும்.. கோவை சிறுமியின் பெற்றோரிடம் போனில் பேசிய முதல்வர் விஜய்
சென்னை: கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் தொலைபேசியில் பேசி முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் சிறுமியின் பெற்றோரிடம் உறுதியளித்துள்ளார்.
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, பக்கத்து வீட்டில் வசித்த கொடூரனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், சிறுமியை பைக்கில் கடத்தி சென்ற பக்கத்து வீட்டை சேர்ந்தவரும், நாகையை சேர்ந்தவருமான கார்த்திக் ( வயது 33) என்பவரையும் அவருக்கு உதவிய மோகன் ராஜ் என்பவரையும் கைது செய்தனர். போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்ற கார்த்தி கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுமி கொலை விவகாரத்தில் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தரப்பும் என்று முதல்வர் விஜய் உறுதி அளித்து இருந்தார். இந்த நிலையில், சிறுமியின் பெற்றோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர் விஜய், பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்று பெற்றோரிடம் முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார்.
-
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
Z பாதுகாப்பை கூட நம்ப மாட்டார்? விஜய் நம்பும் ஒரே ஆள் நயீம் மூஸா! முதல்வரின் இடது கை! யார் இவர்? -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு












Click it and Unblock the Notifications