ஒரே குடும்பத்தின் ஊழல்.. தவெக மாநாட்டில் கொந்தளித்த விஜய்! ஒரே வரியில் முடித்த உதயநிதி ஸ்டாலின்..!
சென்னை: தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் தனது அரசியல் எதிரிகள் என திமுகவையும் பாஜகவையும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் விஜய். இதை அடுத்து பாஜகவினரும் திமுகவினரும் விஜய் மீது விமர்சனக் கணைகளை தொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் குறித்த கேள்விக்கு ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி-சாலையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அதற்கு பிறகாகவே கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக அரசியல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார் நடிகர் விஜய். குறிப்பாக சினிமாவில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபட போகிறேன் என அவர் அறிவித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இது ஒரு புறம் இருக்க அவர் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதை அடுத்து தற்போது கடைசி படத்தில் நடித்து வரும் விஜய் சொன்னது போலவே அரசியலிலும் களம் இறங்கி விட்டார். தொடர்ந்து பல மாதங்களாக அரசியல் கட்சி தொடர்பாக ஆலோசனைகள் அறிக்கைகள் விட்டு வந்த விஜய் இறுதியாக அரசியலில் குதித்தே விட்டார். நேற்று முன் தினம் விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் நடைபெற்ற மாநாடு பெரிய அளவில் விஜய்க்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரத்திற்கிடையே ராம்ப் வாக் வந்த விஜய், அவர்களது உற்சாக வரவேற்பு ஏற்றுக் கொண்டதோடு அவர்கள் வழங்கிய துண்டை தனது தோளில் போட்டுக்கொண்டு நடந்தார். தொடர்ந்து மேடையிலும் கண் கலங்கவே காட்சியளித்தார் விஜய். சினிமா படங்களில் வருவது போலவே விஜயின் வசனங்களும் அவரது ஆக்சன்களும் இருந்தது. இது சமூக வலைதளங்களில் ஒருபுறம் விமர்சனங்களை பெற்றாலும் விஜய் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து பிளவுவாத அரசியலுக்கு எதிராக தான் செயல்படுவேன் என பாஜகவை மறைமுகமாக விமர்சித்தாலும் தமிழகத்தில் திமுகவுக்கு எதிராகத்தான் தனது அரசியல் இருக்கும் என்பதை அழுத்தமாகவே பேசி இருந்தார். குறிப்பாக பெரியார், அண்ணா பெயரை சொல்லிவிட்டு திராவிட மாடல் என்ற பெயரில் ஒரு குடும்பம் கொள்ளையடிக்கிறது என நேரடியாகவே பேசியது திமுகவினரை கொதிப்படையச் செய்திருக்கிறது.
தொடர்ந்து திமுகவினர் சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராக விமர்சனக் கணைகளை தொடுத்து வருகின்றனர். எம்ஜிஆர், தொடங்கி ஜெயலலிதா, விஜயகாந்த், சீமான் என திமுகவை விமர்சனம் செய்ய ஆயிரம் பேர் புறப்பட்டாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் குறித்த கேள்விக்கு ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம் விஜயின் மாநாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,"எல்லாவற்றுக்கும் எங்களின் அமைப்பு செயலாளர் அண்ணன் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். அதற்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை' என ஒரே வரியில் கூறி முடித்துக் கொண்டார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications