தவெக விஜய்யால் பெரிய அடி வாங்கிய பாஜக, விசிக, காங்கிரஸ், அமமுக.. கடந்த தேர்தலை விட கடும் சரிவு!
சென்னை: தவெக தலைவர் விஜய் பெற்றுள்ள வெற்றியால், பாஜக, காங்கிரஸ், விசிக, அமமுக என பல கட்சிகள் தங்களுக்கான இடங்களை இழந்துள்ளன. கடந்த முறை வெற்றி பெற்றதை விடவும் குறைவான தொகுதிகளிலேயே பாஜக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி தவெக 106 தொகுதிகளை தன்வசப்படுத்துகிறது. திமுக கூட்டணி 74 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 54 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும், விசிக 2 தொகுதிகளிலும், தேமுதிக 2 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 சீட்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக 47 தொகுதிகளிலும், பாமக 5 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும், அமமுக 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், அனைத்து கட்சிகளுக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சில கட்சிகளின் ஆதரவை பெற்று விஜய் ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 164 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஎம் 5, சிபிஐ 5, மதிமுக 4, கொமதேக 2, ஐயுஎம்எல் 2, மமக 2, எஸ்டிபிஐ 1, மஜக 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகளில் போட்டியிட்டன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 166 தொகுதிகளிலும், பாஜக 26 தொகுதிகளிலும், பாமக 18, அமமுக 11, தமாகா 4, ஐஜேகே 2, புரட்சி பாரதம் 1, புதிய நீதிக் கட்சி 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளில் போட்டியிட்டன.
அதிமுக கூட்டணியில் 11 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மன்னார்குடி தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாமக 5 தொகுதிகளில் வெற்றி முகத்தில் உள்ளது.
திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 2 தொகுதியில் மட்டுமே வெற்றி முகத்தில் உள்ளது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி முகத்தில் உள்ளது.
கடந்த முறை vs இந்த முறை
காங்கிரஸ் 18 vs 5
விசிக 4 vs 2
பாஜக 4 vs 1
காங்கிரஸ், விசிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தவெகவால் பெரும் அடியைச் சந்தித்துள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலை விட சீட் வெற்றி எண்ணிக்கையில் பெரும் சரிவைச் சந்துள்ளன.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications