தலையில் தூக்கி வச்சு கொண்டாடிய ஜென் ஸி.. ஆப்பு வச்சுட்டாரே சிஎம் விஜய்! ஆர்பி உதயகுமார் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்கள், இளைஞர்கள் போராடக் கூடாது என உத்தரவை பிறப்பித்து ஜென்சி தலைமுறையின் அடிமடியில் கை வைக்கின்ற துணிச்சல் முதல்வருக்கு எப்படி வந்தது? ஜென் ஸி தலைமுறைக்கு விஜய் மீதான நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா? அல்லது விஜய்க்கு ஜென் ஸி தலைமுறையின் மீது நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் பேசியுள்ள ஆர்பி உதயகுமார்," அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள கூறி கல்லூரி கல்வி இயக்கம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

Vijay RB Udhayakumar TVK Gen Z

கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் சார்பில் கடந்த 17ஆம் தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களின் பங்கேற்பதை தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

ஆர்பி உதயகுமார்

17 ஆம் தேதி போடப்பட்ட உத்தரவு நேற்றைய தினம் தான் சட்டசபை நடந்து கொண்டிருக்கும்
போது வெளியானது. வெளியான 2 மணி நேரத்தில் அதற்கான கண்டனங்கள் அனைத்து தரப்பிலிருந்து எதிர்ப்பு வலுக்க தொடங்கியது. தவெக அரசின் இந்த ஜனநாயக உரிமை பறிப்பு உத்தரவை தொடங்கி போராட்டங்கள் நடந்தியதை தொடர்ந்து அதிரடியாக அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக நேற்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்து உத்தரவை வெளியிட்டது.

கல்லூரி மாணவர்கள்

இந்தியா முழுவதும் தேசிய கட்சிகளின் ஆளுமையில் இருந்த போது, தமிழகத்தில் முதன்முதலாக ஒரு மாநில சுயாட்சியை முதன்மையாக வைத்து மாநில மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை முன்வைத்து, கொள்கையை முன்வைத்து, ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வர முடியும் என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் தலைமையில் முதல் முதலாக இந்திய தேசத்திற்கே புரிய வைத்த போராட்டம் தான் இந்தி திணிப்பு போராட்டம். நாடெங்கும் நடைபெற்றது இந்த மொழி போராட்டம்.

ஜனநாயக உரிமை

இப்படி கல்விக்கான உரிமை உள்ளிட்ட இந்த உரிமைகள் எல்லாம் எப்பொழுதெல்லாம் அதிகார மையத்தால் பறிக்கப்படுகின்றதோ, மறுக்கப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் இளைய சமுதாயமும், மாணவ சமுதாயம் பொங்கி எழுந்து போராட்ட களம் அமைத்து, உரிமை முழக்கத்தால் அதிகார மையத்தை அடிபணிய வைக்கும். ஜென் ஸி தலைமுறையின் போராட்ட வரலாறு, இளைய தலைமுறை போராட்ட வரலாற்றை முதல்வர் நன்கு அறிந்திருந்த போதிலும், இன்னும் ஒரு படி மேலே கண்மூடித்தனமான ஜென் ஸி தலைமுறை, அவதாரம் புருஷராக, காக்க வந்த கடவுளாக, முதல்வர் விஜய் அவர்களை கொண்டாடி வருகிற போது, அவர்களின் அடிமடியில் கை வைக்கின்ற துணிச்சல் எப்படி வந்தது என்பது நமக்குத் தெரியவில்லை?

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்கு எடுக்காத காரணத்தினால் மக்களுடைய உரிமைக்கான போராட்ட பட்டினி போராட்டத்தில் அவர் பங்கேற்றவொலை என்கிற வரலாறை நாம் மறைக்க முடியாது. இதனால் தான் போராட்ட களத்தில் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது இளைஞர்கள் பங்கேற்க கூடாது என்று இப்படி அதிரடியான ஜனநாயக விரோத உத்தரவை பிறப்பிக்க துணிச்சல் வருமா?

ஜென் ஸி கிட்ஸ்

இன்றைக்கு 35 சதவீதம் வாக்காளர்கள் விஜய் அவர்களுக்கு ஆதரித்து வாக்களித்திருக்கலாம், 65 சதவீதம் விஜய் வேண்டாம், விசில் வேண்டாம், தவெக வேண்டாம் என்று தான் வாக்களித்துள்ளார்கள். ஒரு உத்தரவை அறிவித்து திரும்பப் பெறுவது என்ன நடைமுறை தெரியவில்லை? உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்னால் அதன் சாதக, பாதங்கள், விளைவுகள் இதைப்பற்றி இந்த அரசு ஆராய்ந்ததா? இல்லை ஆராய்ந்து சொல்வதற்கு இவர் கேட்பதற்கு தயாராக இருக்கிறாரா, அல்லது சொல்வதற்கு யாரும் தயாராக இல்லையா, அல்லது இவர் கேட்பதற்கு தயாராக இல்லையா ஒன்றும் புரியவில்லை .

100 நாள் சாதனை

விஜய் மீதான ஜென்சி தலை முறை நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா! அல்லது விஜய்க்கு ஜென்சி தலைமையான மாணவர்கள் இளைஞர்கள் மீது நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா? என்பது தமிழ்நாடு மக்களுக்கு ஒன்று புரியவில்லை. இது போன்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவது அந்த அறிவிப்புகள் மூலம் ஆழம் பார்ப்பது, களத்திலே எதிர்ப்பு எழுந்தால் அதற்குப் பிறகு அதை ரத்து செய்வது இதுதான் தவெக அரசின் 100 நாள் சாதனையாகும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+