"அப்பா- அம்மா 60வது கல்யாணத்துக்கு போகலை! ஆனா கீர்த்தி கல்யாணத்திற்கு தனி விமானத்தில் போன விஜய்!"
சென்னை: விஜய், அப்பா- அம்மாவின் 60ஆவது திருமணத்திற்கு போகலை, மகள் திவ்யா டிகிரி வாங்கினதற்கு கூட போகலை, ஆனால் கீர்த்தி சுரேஷ் கல்யாணத்திற்கு தனி விமானத்தில் சென்றிருப்பது பெரும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜய் அரசியலுக்கு வந்ததை ஏன் எதிர்க்கிறோம் என்றால் அவர் இதுவரை யாருக்கும் எந்த நன்மையையும் செய்ததில்லை.

மனைவி கூடதான் கருத்து வேறுபாடு, சரி பிள்ளைகளுடன் இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் தாய், தந்தையுடன் இருந்திருக்கலாம். சமூக அந்தஸ்தில் விஜய் சரியில்லை. அப்பா- அம்மா, மனைவி, குழந்தைகள் என எல்லோரோடையும் முரண்பாடு!
வாசலில் தண்ணீர் கேன்
விஜய் வீட்டிற்கு போனால் தண்ணீர் கேன் கூட இருக்காது. வாசலில் தண்ணீர் கேன் வைத்திருந்தால் அங்கு வரும் ரசிகர்கள் தண்ணீர் குடிப்பர், குறைந்தபட்சம் தன்னை தேடி வரும் ரசிகர்களை கூட விஜய் சந்தித்ததே இல்லை.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களை வீட்டுக்கு அழைத்து பார்க்கிறார். இவர் என்ன எம்ஜிஆரை விட பெரிய ஆளா? என கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விவாகரத்து மனு
அந்த மனுவில், "எனது கணவருக்கு ஒரு நடிகையுடன் தொடர்பிருக்கிறது. அந்த தொடர்பை 2021 ஆம் ஆண்டு கண்டுபிடித்து கண்டித்தேன். ஆனால் அவரோ சிறிதும் வருத்தமின்றி என்னை ஒதுக்கிவிட்டு நடிகையுடன் உறவை தொடர்ந்தார். அவ்வப்போது எனது கணவருடன் அந்த நடிகை வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்கிறார். அங்கு என் கணவர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிடுவதால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் இது அவமானமாக இருக்கிறது.
பிரிந்து வாழும் விஜய் சங்கீதா
கடந்த 3 ஆண்டுகளாக நானும் அவரும் பிரிந்து வாழ்கிறோம். எங்களது திருமண வாழ்வு எப்போதோ முறிந்து விட்டது. ஆவணங்களில் மட்டுமே கணவன் மனைவியாக இருக்கிறோம். நடிகையின் பெயரை சொல்லாமல் இப்போது தவிர்க்கிறேன். ஆனால் தேவைப்பட்டால் வழக்கு தொடர்வேன். என் கணவருக்கும் நடிகைக்கும் இருக்கும் உறவு குறித்து ஆதாரங்களை வெளியிடுவேன் என சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சங்கீதா விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு செங்கல்பட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனு லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெறும் கோர்ட்டுக்கு மட்டுமே தெரியப்படுத்த வேண்டிய விஷயங்கள் எல்லாம் தற்போது வெளியாகிவிட்டது.
டாக்குமென்ட்டை லீக் செய்தது யார்
இதனால் சங்கீதா அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த டாக்குமென்ட்டை லீக் செய்தது யார் என்பது குறித்து தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு எந்த நடிகையுடன் தொடர்பு என்பதை அறிந்து கொள்ள பலர் ஆர்வம் காட்டி, அவரா, இவரா என குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
வரம்பு மீறும் ரசிகர்கள்
நல்லதோ கெட்டதோ இதெல்லாம் அவர்களது தனிப்பட்ட விஷயம் என்பதை தெரிந்து கொண்டு யூகங்களை உண்மையாக்குவதை கைவிட வேண்டும். அது போல் எந்த மனைவியாவது கட்டிய கணவர் மேல் இப்படி ஒரு அபாண்ட பழியை போடுவாரா என்பதையும் தவெகவினர் சிந்திக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சங்கீதாவை தரக்குறைவாக பேசுவதும், அவரது கேரக்டரை டேமேஜ் செய்வதும், ஒருமையில் பேசுவதும் என வரம்பு மீறும் கட்சியினரை விஜய் அடக்கி வைக்காமல் இருப்பது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications