Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறிய விஜய்? மவுனம் ஏன்? ரீல் டூ ரியல் மாறியது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து 10 மாதங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அவர் முன்பு அளித்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருவது ஏன் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது.

விஜய் அரசில் கட்சி ஆரம்பிப்பாரா? மாட்டாரா? அப்படி அரசியலில் இறங்கினால் எந்தக் கட்சியில் இணைவார் என்று பல ஆண்டுகள் முன்பாக பத்திரிகைகளில் நிறைய விவாதங்கள் நடத்து இருக்கின்றன. அவரது தந்தை சந்திரசேகர் தன் மகனை எப்படியாவது அரசியல் களத்திற்கு நகர்த்திக் கொண்டு வரவேண்டும் எனத் துடியாய் துடித்தார்.

vijay dmk

விஜய் 'வேட்டைக்காரன்' படம் வெளியான நேரத்தில், அதாவது 2009 ஆம் ஆண்டு விஜய் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகத் தகவல் பரவியது. அவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி இருந்த நேரம். அப்போதுதான் விஜய்க்குப் புதுச்சேரியில் மக்கள் இயக்கம் மிகச் சிறப்பாக ஒரு நலப்பணி திட்டங்களை நடத்தியது. புதுவை முதல்வர் வைத்தியலிங்கத்துடன் புஸ்ஸி ஆனந்த் ஒரு தொடர்பு இருந்தது. அதன் மூலம் விஜய்க்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்தார். அவரை சந்திப்பதற்காக விஜய்யும் அவரது தந்தை சந்திரசேகரும் டெல்லி சென்று சந்தித்துவிட்டுத் திரும்பினார்கள்.

அப்போது பலரும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவிக்கு விஜய் வருவார் என்றார்கள். தேசிய அளவில் விஜய்க்கு ஏதேனும் பதவி வழங்கப்படும். அதற்காகவே ராகுல் காந்தியே விரும்பி விஜய்யை அழைத்துள்ளார் என்றும் தகவல்கள் கசிந்ததன். இதைப் பற்றிக் குறைந்தது 10 நாட்களாக விஜய் மவுனம் காத்து வந்தார். ராகுல் சந்திப்பு பற்றி வாய் திறக்கவே இல்லை. பிறகு 'வேட்டைக்காரன்' படப்பிடிப்பிலிருந்த அவர் திடீரென்று ஊடகத்தைச் சந்தித்து விளக்கம் தர முன்வந்தார். அவருடன் தந்தை எஸ்.ஏ.சியும் இருந்தார்.

அன்று விஜய் பேசும்போது, "ராகுல் காந்தி என்னைச் சந்திக்க வேண்டும் என்று அவரே விரும்பி அழைப்பு விடுத்தார். அது மிகப்பெரிய வாய்ப்பு. ஆகவே, நானும் அப்பாவும் உடனடியாக டெல்லி சென்று சந்தித்தோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம். பல விசயங்கள் பற்றிப் பேசினோம். மக்கள் இயக்கம் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பேசினோம். ஆனால் உறுதியான முடிவுகள் எதையும் எடுக்கவில்லை. அதற்காகக் காலம் இது இல்லை. எதிர்காலத்தில் என்னை நம்பி இருக்கும் இளைஞர் சக்திகளை நான் வழி நடத்த வேண்டும். அதற்கு நான் அரசியலில் ஈடுபடவேண்டும்.

இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. நான் ராகுலைச் சந்தித்துப் பற்றி பலரும் பலவிதமாக எழுதி இருக்கிறார்கள். பத்திரிகைகளில் வந்த பல விசயங்களை நான் 10 நாட்களாகப் படித்தேன். அதைப் படிக்கும்போது இப்படி எல்லாம் நடந்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். எனக்கு எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறது. அது உடனே நடக்காது. எதிர்காலத்தில் நடக்கும்.

vijay dmk

எனவே அது குறித்து ராகுல்காந்திக்கு எந்த உத்தரவாதமும் தரவில்ல. அவரை சந்தித்ததை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். அது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. இப்போதைக்கு நான் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அதான் என் இலக்கும்" என்று விளக்கமாகப் பதில் அளித்திருந்தார்.

இந்தச் சந்திப்பில் விஜய் பத்திரிகையாளர்களிடம் ஒரு வாக்குறுதியை அளித்து இருந்தார். அவர் இன்றைக்கு அதை மறந்து இருக்கலாம். அந்த வாக்குறுதி என்ன என்ன? அன்று விஜய் பேசும் போது, "எனக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் வந்தால், அதை ஊடகத்தினரைச் சந்தித்து முறையாக அறிவித்துவிட்டுத் தான் தொடங்குவேன். அது உறுதி. உங்களிடம் சொல்லாமல் கட்சி ஆரம்பிக்க மாட்டேன்" என்று கூறி இருந்தார்.

ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்தார். மாநாட்டைக் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடத்தினார். அவர் கடந்த 2009இல் ஊடகத்தைச் சந்தித்துச் சொல்லிவிட்டுத்தான் கட்சியை அறிவிப்பேன் என்பதை மட்டும் மறந்தே போய்விட்டார். இதுவரை ஒருமுறைகூட அவர் சந்திக்கவே இல்லை. இந்த வாக்குறுதியை அவர் ஏன் நிறைவேற்றவில்லை.

ரஜினிகாந்த் கூட கட்சி தொடங்குவதற்கு முன்னால் ஒரு ஊடக சந்திப்பை நடத்தினார். ஆனால்,மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய விழா, கட்சி தொடங்கியதற்காக ஒருமுறை கூட ஊடகத்தைச் சந்தித்து பேட்டி அளிக்கவில்லை. அதற்கு நேரம் ஒதுக்குவாரா? கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+