விஜய் அண்ணா என்னை காப்பாத்துங்க! போலீஸ் துரத்துறாங்க! நைட் தூக்கமில்லை.. கேரள ரசிகரின் கண்ணீர்
சென்னை: நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து இளைஞர் ஒருவர் பனையூருக்கு வந்து அங்கு கண்ணீர் விட்டபடியே கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் விஜய்யை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற முனைப்புடன் பாலக்காட்டிலிருந்து உன்னி கண்ணன் என்பவர் சென்னையில் நீலாங்கரைக்கு வந்துள்ளார்.

அவர் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டு வாசலில் நின்று கொண்டு அழுதுக் கொண்டே, "சார் என் பேரு உன்னி கண்ணன். என் வீடு கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ளது. நான் விஜய் சாரை பார்க்க வேண்டும். இதற்காக நான் நைட் வந்தேன். எனக்கு தூக்கமே இல்லை.
காலையில் 5 மணிக்கு எழுந்து நீலாங்கரை வீட்டிற்கு சென்றேன். அங்கு போலீஸார் என்னை உள்ளே விட மாட்டேங்கிறாங்க. பனையூருக்கு போனேன். அங்கயும் அவரை பார்க்க முடியவில்லை. எனக்கு அவருடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது.
இதற்காகத்தான் நான் தாடி, நீள முடியெல்லாம் வைத்துள்ளேன். இந்த நீள முடியுடன் பொண்ணு பார்க்க போக முடியவில்லை என வீட்டில் என்னை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் அண்ணனை பார்க்காமல் என்னால் முடியை வெட்ட முடியாது. எப்படியாவது நான் விஜய்யை பார்க்க வேண்டும். விஜய் அண்ணா என்னை காப்பாற்றுங்கள் என கண்ணீர் விட்டபடியே அந்த இளைஞர் கோரிக்கை வைத்தார்.
இவரை போல் நிறைய பேர் விஜய் வீட்டுக்கு வந்து அவரை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். அது போல் ஒரு சிறுமி விஜய் வீட்டு வாசலில் பொருத்தியுள்ள கேமராவை பார்த்து விஜய் அண்ணா உங்களை பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அது போல் சில ரசிகர்கள் கேமராவை பார்த்து பேசி, அதன் முன்பு சாஸ்டாங்கமாக விழுந்து கும்பிட்டுள்ளனர்.
GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக துபாய் சென்றார் விஜய். அவர் லோக்சபா தேர்தலுக்கு தமிழகத்திற்கு வாக்களிக்க வருவார் என கூறப்பட்டு வந்த நிலையில் துபாயில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு விமானங்கள் ரத்தாகியுள்ளன. இன்று விமான சேவையை பொறுத்து அவர் தமிழகத்திற்கு வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. வாக்களிக்க வரும் விஜய்யை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கடந்த முறை சட்டசபை தேர்தலுக்கு வாக்களிக்க சைக்கிளில் வந்தார் விஜய். அவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அவ்வாறு வந்ததாக தகவல்கள் பரவின. ஆனால் அதை விஜய் தரப்பு மறுத்தது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications