நாட்டை பாத்துக்க NTK , DMK இருக்கு.. ஜாலியா இருப்போம்.. திடீர் பல்டி அடித்த தவெக ஆதரவாளர் பிரசாந்த்
சென்னை: தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். இவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு ஒன்று விஜய்யின் ஆதரவாளர்களையும், தவெக தொண்டர்களையும் கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. அவர் தனது பதிவில். நாட்டை பார்த்துக் கொள்ள நாம் தமிழர் கட்சி, திமுக இருக்கிறது.. நாம் பிக்பாஸ் பார்த்து ஜாலியா இருப்போம் என்று தவெக தொண்டரின் பதிவுக்கு பதில் அளித்தார். இது தான் விஜய்யின் ஆதரவாளர்களை கொந்தளிக்க காரணமாக உள்ளது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற போது, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் திமுகவினர் உள்பட பலர் விஜய்க்கு எதிராக விமர்சனங்களை இணையதளங்களில் வைத்து வந்தனர். ஆனால் அதேநேரம் பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி விஜய்க்கு ஆதரவாகவே பதிவிட்டு வந்தார். பிரசாந்த் ரங்கசாமியை பொறுத்தவரை விஜய்யின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். பல்வேறு திரைப்படங்களை இவர் விமர்சனம் செய்தாலும் ப்ளூ சட்டை மாறன் போலவே, பிரசாந்தும் அண்மை காலமாக அரசியல் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறன் விஜய்க்கு எதிராக பதிவிட்டு வந்த நிலையில், பிரசாந்த் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாகவே பதிவிட்டு வந்தார். இதற்காக அவரை திமுகவினர் உள்பட பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இதில் சிலர் அவர் உருவ கேலி செய்தும் கடுமையான விமர்சித்தார்கள். எனினும் தொடர்ந்து பிரசாந்த் விஜய்க்கு ஆதரவாக பதிவிடுவதை நிறுத்தவில்லை... இதனால் அவர் வெளியிட்ட முந்தைய பதிவுகளை வைத்தே அவரை விமர்சித்தார்கள்.
கரூர் சம்பவம்
இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் விஜய் மற்றும் தவெக தரப்பு வாதத்தையே கேட்கவில்லை என்று சினிமா விமர்சகர் பிரசாந்த் குற்றம்சாட்டினார். இதற்கும் திமுகவினர் கடும் பதிலடி கொடுத்தனர். பிரசாந்த் வெளியிட்ட பிறகு தான் இந்த விவாகரம் பெரிய அளவில் கடந்த சனிக்கிழமை அன்று பேசுபொருளாக இருந்தது.
பிக்பாஸ் சீசன் 9
இந்த சூழலில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று பல்வேறு பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இதுபற்றி பிரசாந்த் வெளியிட்ட கிண்டலான பதிவு தான் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. தவெகவின் தீவிர ஆதரவாளராக மாறியிருந்த சினிமா விமர்சகர் பிரசாந்த் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்ற வாட்டர் மிலன் திவாகர் குறித்து கிண்டல் செய்து பதிவிட்டி ஸ்மைலி போட்டிருந்தார்.
ஜாலியாக இருப்போம்
இதை பார்த்த தவெக ஆதரவாளர் ஒருவர், தயவு செய்து bigboss என்னும் சாக்கடையை பற்றி பேசி மக்களின் நேரத்தை வீண் செய்யாதீர்கள்.. இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று கூறியிருந்தார்- இதற்கு பதில் அளித்த சினிமா விமர்சகர். தமிழ்நாட்டை காப்பாத்த நாம் தமிழர் - தி.மு.க இருக்கு.. நாம ஜாலியா இருப்போம்! என்று கூறியுள்ளார். இதை பார்த்த தவெக ஆதரவாளர்கள் மற்றும் நடிகர் விஜய்யின் ரசிகர்கள், அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
விமர்சனங்கள்
தவெக ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "உலகமே அழிஞ்சாலும் நீங்க ஜாலியா தான் இருப்பீங்கன்னு ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு தெரியுமே" என்று கூறியுள்ளார். அதேபோல் சிலர் தென்னை மரத்தில் ஒரு குத்து.. ஏணி சின்னத்தில் ஒரு குத்து என்றும் பிரசாந்தை கிண்டல் செய்துள்ளார்கள்.. மேலும் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதிக்கப்படுகிறது.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
ஜானை அனுப்புறேன்.. ராகுலிடம் சொன்ன விஜய்! தவெகவின் ரகசிய ஆயுதம் ஜான் ஆரோக்கியசாமி டெல்லி செல்கிறார் -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு?











Click it and Unblock the Notifications