ரஜினியே எதிர்பாராத டுவிஸ்ட்.. “தளபதி காக்காதான்!” கழுகு தனியா தின்னும் - விஜய் ரசிகர் கொதிப்பு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சொன்ன காக்கா, கழுகு கதையை வைத்து அவருக்கே பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார் விஜய் ரசிகர். அப்படி என்ன சொன்னார்.. விரிவாக பார்ப்போம்.
சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விஜய் மக்கள் இயக்கத்தை சசி என்ற ரசிகர், "விஜய் ரசிகர்கள் ரஜினி படத்தையும் பார்ப்போம். ஆனால், சமீப காலமாக ரஜினிகாந்தின் செயல்பாடுகள் விஜய்யை விமர்சிப்பதைபோல் உள்ளது. இவர் வழக்கம்போல் குட்டிக் கதை சொல்வார். அதில் எந்த பிரச்சனையும் இல்லை

ஆனால், இப்போது சொன்னது விஜய்யை சாடுவதுபோல் உள்ளது. அவர் கழுகு போலவும், நான் காக்கா போன்றும் அவர் பேசி இருக்கிறார். நாங்கள் உயர உயர பறப்போம். காக்கா ஓரளவு தான் பறக்கும் என்று பேசி இருக்கிறார். இதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். அவருக்கு நாங்கள் சொல்வது என்னவென்றால், கழுகு தான்தின்னிப் பறவை. தனியாக சாப்பிடும்.
காக்கா அப்படி இல்லை. விஜய்யை காக்கா என்றே சொல்லட்டும். அது சக பறவைகளை அழைத்து உணவு உண்ணும். அதிலும் நாங்கள் சிறப்பு தானே. அதுமட்டுமில்லாமல் இவர் எதற்கும் குரல் கொடுத்ததைபோல் தெரியவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை சமூக விரோதிகள் உள்ளே இருப்பதாக கூறினார்.
அதே நேரம் விஜய் படப்பிடிப்பை விட்டுவிட்டு நள்ளிரவில் சென்று 12 பேரின் வீட்டுக்கு சென்று நிதி பங்களிப்பு கொடுத்தார். அதேபோல் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். இவர் தலைவர் என்றால் வெறும் ரசிகர்களுக்கு மட்டும் தலைவர் இல்லை. அவர் என்ன செய்கிறார் என எல்லா கட்சிகள் பார்க்கிறார்கள்.
அடுத்து அவர் அரசியலை நோக்கிதான் வந்துகொண்டு உள்ளார். மக்களின் குரலாக அவர் எதிரொலிக்கிறார். இன்று நேற்று அல்ல. 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து ரசிகர்களையும் அழைத்து மீனவர்களுக்கு ஆதரவாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். அதை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வந்தார்.
எவ்வளவோ நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வர வேண்டியது தானே?அவர் நடிப்பதாக சொல்கிறார்கள். நடிப்பதற்கும் ஒரு மனப்பான்மை வேண்டும்தானே. நீட் தேர்வால் இறந்த அனிதா வீட்டுக்கு நள்ளிரவு சென்று உதவி செய்தார். இதெல்லாம் சமூகத்தின் மீதுள்ள அக்கறை. அவர் நன்றாக வளர்ந்து வரும் பச்சைத் தமிழன்.
தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி இதுதான். விரைவில் முதல் கட்சியாகிவிடும். திமுக, அதிமுகவுக்கு மாற்று நாங்கள் என்று எவ்வளவோ பேர் வருகிறார்கள். ஆனால், விஜய்தான் அமைதியாக கொண்டு வருகிறார். விரைவில் அவர் கண்டிப்பாக வருவார். ஒட்டுமொத்த தொண்டர்கள், மக்களும் அவரை நம்ப தொடங்கிவிட்டார்கள்.
திமுக, அதிமுக என்று 50 ஆண்டுகாலம் எந்த மாற்றமும் இல்லை. விஜய் படை திரட்டி செய்யவில்லை. அமைதியாக செய்கிறார்கள். மாணவர்கள் நிகழ்ச்சி என்றால் அவர்கள் புரியும் வகையில் செயல்படுகிறார். அப்பா அம்மாவிடம் வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என சொல்கிறார்.
இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நல்ல மாற்றத்தை அவர் தருவார். ரஜினிகாந்துக்கு விரக்தி. என்னவென்றால் நாம் சூப்பர் ஸ்டாராக இருந்தோம். அதை அவரே ஒரு மேடையில் பேசும்போது, 'நான் கோவை சென்றேன். அங்கே எனக்கு எப்போதும் ஒரு மாஸ் இருந்தது. ஆனால், இப்போது எனக்கு பிறகு ஒரு நடிகர் வந்தார்.
ஏர்போர்ட் ஊழியர்கள் என்னிடம் இருங்கள், ஒரு பெரிய படத்தின் நடிகர் போகிறார் என்று சொன்னார்.' என ரஜினி விரக்தியாக பேசினார். விஜய் அவருடைய இடத்திற்கு வந்துவிட்டார் என்ற விரக்தி ஒன்று. அடுத்து அரசியலில் அவர் பின்வாங்கிவிட்டார் என்ற விரக்தி. வருவேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. அந்த விரக்தியின் வெளிபாடுதான் காக்கா, கழுகு கதை." என்றார்.
-
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications