கொண்டாட முடியல நாங்க 2026 பொங்கல..புலம்பிய ரசிகர்களுக்கு குட்நியூஸ்! 14ம் தேதி ரிலீசாகும் விஜய் படம்
சென்னை: சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் விஜய் நடித்த ஜனநாயகன் படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதனால் சோக கீதம் பாடி வந்தனர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் வந்துள்ளது ஒரு அறிவிப்பு. ஆம் விஜய் நடிப்பில் மெகா ஹிட்டான தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்துள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளரான 'கலைப்புலி' தாணு. இக்கட்டான நிலையில் இருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' படம், வெளியீட்டுக்கு முன்பே பெரும் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.
அரசியல் பின்னணியைக் கொண்டதாக பேசப்படும் இந்த படம், ஜனவரி 9-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையால் அந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில், பொங்கல் வெளியீடும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஜனநாயகன்
இந்த படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியம் மறுத்ததுடன், படத்தை மீண்டும் மறுஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து, படத் தயாரிப்பு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த ஜனவரி 7-ம் தேதி நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, மத்திய தணிக்கை வாரியம் படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவில் உள்நோக்கம் இருப்பதாகத் தோன்றுகிறது எனவும், உடனடியாக 'யு/ஏ' சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
சென்சார் சன்றிதழ்
ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். வசதவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி வாயிலாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் நேரில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். படத் தயாரிப்பு குழு தரப்பின் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹதகி மற்றும் சதீஷ் பராசரன் வாதிட்டனர்.
நீதிமன்றம் தடை
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பே படம் வெளியீட்டு தேதியை அறிவித்தது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். மேலும், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாக வேண்டும் என நீதிமன்றத்திற்கு அழுத்தம் தரக் கூடாது என்றும், தணிக்கை வாரியத்திற்கு பதிலளிக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார். இறுதியாக, நீதிபதிகள் 'ஜனநாயகன்' படத்தை ஜனவரி 21-ம் தேதி வரை வெளியிடக் கூடாது என இடைக்கால தடை விதித்தனர்.
பொங்கல் 2026 விஜய் படம்
இந்த உத்தரவால், 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் வாய்ப்பு முற்றிலும் தடைபட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். விஜய்க்கு ஆதரவாக பல நடிகர்களும் இந்தப் பொங்கலை கொண்டாடப் போவதில்லை எனவும், ஜனநாயகம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் நாள்தான் தங்களுக்கு பொங்கல் என கூறி வந்தனர். இந்த நிலையில் ஜனநாயகம் ரிலீஸ் ஆகாததால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கடும் நெருக்கடி உருவானது.
தெறி ரீ ரிலீஸ்
அதாவது ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் அந்த படம் ரிலீஸ் ஆகாததால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். பராசக்தியை வெளியிட முயன்றும் அந்த நிறுவனம் அவர்களுக்கு படத்தை தரவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் ரசிகர்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக விஜய் நடித்த தெறி படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளரான தலைப்புலி தானு. ஏற்கனவே விஜய் நடித்த கில்லி, சச்சின் திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
திரையரங்கு உரிமையாளர்கள்
குறிப்பாக கில்லி முந்தைய ரீ ரிலீஸ் வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்தது. அதை வைத்து சச்சினை ரிலீஸ் செய்திருந்தார் தயாரிப்பாளர் கலைபுலி தானு. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்களும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். இதனை தியேட்டர் உரிமையாளர்களும் வரவேற்றுள்ளனர்.
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications