விஜய் ஆட்சி! “கஜானா காலியானா.. டக்குனு 2 படம்! நிதி நிலைமை சீராகிடும்!” ரசிகர்களின் உலகமே தனிதான்!
சென்னை: விஜய் பற்றி அவரது ரசிகர்கள் சொல்லும் விஷயங்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, "கஜானா காலியாவது போல் இருந்தால்.. டக்குனு இரண்டு படங்களில் நடித்து.. அதன் மூலம் கிடைக்கும் ஆயிரம், ரெண்டாயிரம் கோடியை எடுத்து கஜானாவை நிரப்பி விடுவார்" என்று பேசுவதை கேட்கும்போது, விஜய் ரசிகர்களின் உலகமே தனிதான் என சொல்ல தோன்றுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
விஜய்யின் நல திட்டங்கள் குறித்து, அவரது ரசிகர்கள் பேசும் விஷயங்கள் கொஞ்சமும் யதார்த்தத்திற்கு பொருந்தாததை போல இருக்கின்றன.

குறிப்பாக, மக்களுக்கு பணம் கொடுக்கும் அவரது அறிவிப்பு பற்றி இளம்பெண் ஒருவர் கூறுகையில், "விஜய் முகத்தை பார்த்து கண்டிப்பாக அவருக்கு ஓட்டு போடுவார்கள். அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நான் பயங்கரமாக ஈர்க்கப்பட்டேன். எல்லோரும் ரூ.8,000 கூப்பன் தருகிறேன், ரூ.10,000 கூப்பன் தருகிறேன் என்று சொன்னார்கள். ஆனால், விஜய் அறிக்கையில் அந்த சீனே கிடையாது" என்று சொல்ல..
குறுக்கிட்ட ரிப்போர்ட்டர், விஜய் கூடதான் ரூ.2,500 தருகிறேன் என்று சொன்னாரே! அதெல்லாம் கணக்கில் வராதா? என கேள்வி எழுப்ப..
சட்டென அலர்ட் ஆன அந்த பெண், "இந்த இடத்தில்தான் நீங்க தப்பா புரிந்துக்கொண்டிருக்கிறீர்கள். அவர் மக்கள் பணத்திலிருந்து தருவேன் என்று சொல்லவில்லை, என்னுடைய பணத்திலிருந்து கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். மக்கள் பணம் அவருக்கு தேவையில்லை என அறிவித்துவிட்டார். அவர்தான் இனி" என்று பேசியிருந்தார்.
இதை கேட்ட பலருக்கும், அதெப்படி சொந்த பணத்தை விஜய் கொடுப்பார்? அவருடைய சொந்த மகளுக்கும், மகனுக்கும், மனைவிக்கும், பெற்றோருக்குமே அவர் கடன்தான் கொடுத்திருக்கிறார். அப்படித்தான் தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்பேர்பட்டவர் எப்படி மக்களுக்கு மட்டும் தன்னுடைய சொந்த பணத்தை அள்ளி அள்ளி தருவார்?
அப்படியே தருவதாக இருந்தாலும், எத்தனை மாதம் தர முடியும்? அரசாங்கத்தை நடத்த நிதி தேவை. ஒருவேளை நிதி நிலைமை மோசமாக இருக்கிறது, நிதி பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது எனில் என்ன செய்வார்? என்று கேள்வி எழுகிறது. இதற்கும் விஜய் ரசிகர்கள் ரெடியான பதிலை வைத்திருக்கிறார்கள்,
"கஜானா காலியாவது போல் இருந்தால்.. டக்குனு இரண்டு படங்களில் நடித்து.. அதன் மூலம் கிடைக்கும் ஆயிரம், ரெண்டாயிரம் கோடியை எடுத்து கஜானாவை நிரப்பி விடுவார்" என்பதுதான் அந்த பதில்.
இதெல்லாம் சோஷியல் மீடியாவில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆட்சி அதிகாரம், நிதி நிர்வாகம், அரசியல் இது குறித்து எதுவும் தெரியாமல், எதையாவது பேசி வருவது, இதெல்லாம் தெரிந்தவர்கள் பேசினால் கடித்து வைப்பது என விஜய் ரசிகர்கள் ஆக்ரோஷமாக சோஷியல் மீடியாக்களில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் கூட ஓகேதான். ஆனால், விஜய்க்கு ஓட்டு போட 3 பிளைட் புடிச்சு 15 மணி நேரம் டிராவல் செய்து வந்து, வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை என்று தெரிந்து ஏமாற்றமடைந்ததாக கூறுவது எல்லாம்.. என்ன கணக்கு என்றே தெரியவில்லை. படித்து வெளிநாட்டில் வேலை செய்து வரும் நபர்களுக்கு, தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பது கூட தெரியாதா? அதை செக் செய்யாமல் தான் பிளைட் புடிச்சு வந்திருக்கிறார்களா? என்கிற கேள்வியும் எழுகிறது.












Click it and Unblock the Notifications