TVK.. TVK.. விடாமல் கத்திய தவெக தம்பிகள்.. இங்கே வாங்களேன்.. ஒரே கேள்வியில் ஆப் செய்த கனிமொழி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுக்கு மற்ற கட்சிகளின் கூட்டங்களுக்கு என்று TVK.. TVK.. என்று கத்துவது இப்போது வழக்கமாகிவிட்டது. இதையே திமுக எம்பி கனிமொழியிடமும் அவர்கள் செய்ய போய்.. கடைசியில் கனிமொழி கொடுத்த பதிலடி டிரெண்டாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பொது இடங்களில் TVK.. TVK.. என்று கத்துவது வழக்கம். அது விஜய் நடத்தும் கூட்டங்களில் அதிகமாக இருக்கும். விஜய் வரும் போது, போகும் போதெல்லாம் அதிகமாக TVK.. TVK.. என்று கத்துவார்கள். இது பொதுவாக எல்லா கட்சிகளிலும் நடப்பதுதான்.

ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஒரு கட்டம் மேலே போய் மற்ற கட்சிகளின் கூட்டங்களிலும் போய் இதேபோல் கத்துவது வழக்கமாகி வருகிறது. முக்கியமாக கொள்கை எதிரி என்று கூறும் பாஜகவின் கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இப்படி கத்துவது இல்லை.
திமுக நிகழ்வுகள்
ஆனால் அரசியல் எதிரியான திமுகவின் நிகழ்வுகள், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொது நிகழ்வுகளில் இப்படி எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கத்துகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் காரில் வேகமாக செல்லும் போது கூட வெளியே சாலையில் நின்று பெரிதாக யாருக்கும் கேட்காதபடி.. கேமராவில் மட்டும் ரெக்கார்ட் ஆகி ரீல்ஸ் போட வசதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் TVK TVK என்று கத்துவது வழக்கமாகி வருகிறது.
இப்படி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் TVK TVK என்று கத்துவது பல இடங்களில் தொடர்கிறது. சமீபத்தில் சர்வதேச அளவில் பிரபலமான யூ டியூபர் speed வீடியோவில் இதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் TVK TVK என்று கத்தினார்கள். அதற்கு speed அப்படி என்றால் என்ன என்று கேட்க.. விஜய்.. விஜய்.. சி.எம் ஆப் இந்தியா என்றெல்லாம் தவெக நிர்வாகிகள் உளறியதுதான் மிச்சம். இந்தியாவிற்கு சி.எம் போஸ்ட்டா.. என்னங்க சொல்றீங்க என்று கேட்கும் அளவிற்கே அந்த அரசியல் முழக்கம் இருந்தது.
உன்னை மாதிரி பெரியார் முகமூடி போட்டு தற்குறி கோவை தான்டா இப்படி தான் ஆர்கானிசம் அடைஞ்சிப்பான் ...
— 🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶 (@pablo_twtz) October 29, 2025
கனிமொழி அக்கா தில்லா ஏன்டா மறைஞ்சு நின்று கந்தன் முன்னாடி வானு சொல்றாங்கள .. அதான் பெரியார் வளர்ப்பு .. உங்க பங்கன் அண்ணண் 30 நாள் வீட்டுக்குள்ள ஒளிஞ்ச மாதிரி நீங்களும் ஒளிஞ்சுட்டு… https://t.co/wAc11fMLtq pic.twitter.com/75P16dcQau
கனிமொழி
இப்படி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுக்கு மற்ற கட்சிகளின் கூட்டங்களுக்கு என்று TVK.. TVK.. என்று கத்துவது இப்போது வழக்கமாகிவிட்டது. இதையே திமுக எம்பி கனிமொழியிடமும் அவர்கள் செய்ய போய்.. கடைசியில் கனிமொழி கொடுத்த பதிலடி டிரெண்டாகி வருகிறது.
நேற்று கனிமொழி ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு வெளியே வந்தார். அப்போது இரண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தம்பிகள் சம்பந்தமே இல்லாமல் TVK.. TVK.. என்று கத்தினார்கள். கனிமொழி இதை கண்டுகொள்ளவில்லை என்று தெரிந்ததும் வேண்டும் என்றே மீண்டும் TVK.. TVK.. கத்தினார்கள்.
இதை பார்த்து.. யாருங்க இது என்று கிண்டலாக பார்த்து சிரித்த கனிமொழி.. இங்கே வந்து பேசுங்க.. ஏன் இப்படி கத்துறீங்கன்னு explain பண்ணுங்க பார்க்கலாம் என்று கேட்டார். இதை கேட்டதும் சட்டென.. ஐயோ.. இப்போ என்ன செய்யணும்னு தெரியலையே என்பது போல தவெக தம்பிகள் அமைதியானார்கள். வாங்க வந்து explain பண்ணுங்க என்று கனிமொழி மீண்டும் கேட்டு.. உங்களால் முடிஞ்சா explain பண்ணுங்க.. ஆனால் உங்களால் எல்லாம் முடியுமா? என்று பதிலடி கொடுத்தார். இதை கேட்டு எதுவும் பேச முடியாமல் கடைசியில் தவெக தம்பிகள் அங்கிருந்து வெளியேறினார்கள்.
-
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
ஜானை அனுப்புறேன்.. ராகுலிடம் சொன்ன விஜய்! தவெகவின் ரகசிய ஆயுதம் ஜான் ஆரோக்கியசாமி டெல்லி செல்கிறார்












Click it and Unblock the Notifications