திருப்பூர் வடக்கில் சத்யபாமா.. 234-க்கு 23 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்த விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் சட்டசபை தேர்தல் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அறிவித்தார். இதில் பெண் வேட்பாளர்கள் 23 பேருக்கு விஜய் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார். குறிப்பாக திருப்பூர் வடக்கில் சத்யபாமாவும், பல்லவி திருவிக நகரிலும் போட்டியிடுகிறார்கள்.
வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மொத்தம் 8 நாட்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் இருந்தாலும் விடுமுறைகள் எல்லாம் கழித்தால் 4 நாட்கள் மட்டுமே வெட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.

தவெக வேட்பாளர்கள் லிஸ்ட்
எனவே அரசியல் கட்சிகள் கட்சிப் பணிகளை வேகமாக செய்து வந்தன. அதன்படி முதன் முறையாக தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகம் இன்று வேட்பாளர்கள் லிஸ்டை வெளியிட்டது. தலைவர் விஜய் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். அப்போது சி ஜோசப் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார்.
இதேபோன்று புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோருக்கும் சீட் வழங்கியிருந்தார். அதிமுக, திமுகவில் இருந்து விலகி தவெகவுக்கு வந்தவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார் விஜய். குறிப்பாக பெண்களுக்கு என்று எடுத்துக்கொண்டால் 23 பேருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். தவெகவில் உள்ள பெண் வேட்பாளர்கள் யார் யார் எங்கு போட்டியிடுகிறார்கள் என்பதை இங்கு காணலாம்.
தவெகவில் பெண் வேட்பாளர்கள்
* சத்யபாமா - திருப்பூர் வடக்கு
* காமாட்சி - பல்லாவரம்
* பல்லவி - திருவிக நகர்
* தாஹிரா - ராணிப்பேட்டை
* சிந்து - குடியாத்தம்,
* கமலி - அவிநாசி
* கலைச்செல்வி - ஆத்தூர்
* ரேவதி - குன்னம்
* ஜெகதீஸ்வரி - ராஜபாளையம்
* சுஜாதா - கெங்கவல்லி,
* விஜயலட்சுமி - ஏற்காடு
* கனிமொழி - கவுண்டம்பாளையம்,
* ராணி நாச்சியார் - சிவகங்கை
* மலர்விழி - முதுகுளத்தூர்
* எழில் கேத்ரின் - மதுராந்தகம்
* திலகவதி - பாப்பிரெட்டிப்பட்டி
* அமுதராணி - வாசுதேவநல்லூர்
* கீர்த்தனா - சிவகாசி
* சிந்தாமணி - திருமயம்
* நாகஜோதி - வேடசந்தூர்
* கலைச்செல்வி - பவானிசாகர்
* கவுரி சித்ரா - ராதாபுரம்
* விஜயலட்சுமி - குமாரபாளையம்.












Click it and Unblock the Notifications