ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விஜய்.. கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து கிரேட் எஸ்கேப்!
சென்னை: பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் போட்டியிடுகிறார். இதற்காக அவர் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் தகவல் முரண்பாடுகள் இருந்தன. இதனால் மனு நிராகரிக்கப்படும் நிலைமை இருந்தது. இந்நிலையில், தற்போது கூடுதல் பிரமாண பத்திரத்தை விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவெ தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், வயது உள்ளிட்ட விஷயங்களில் முரண்பாடுகள் இருந்தன. இது மனுவை நிராகரிக்கக்கூடும் என்கிற அச்சம் இருந்தது. எனவே, தற்போது கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

விஜய் வேட்புமனுவில் என்ன பஞ்சாயத்து?
விஜய் கடந்த மாதம் 28ம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது வயதை 52 என்று குறிப்பிட்டிருந்தார். அதை தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியில் கடந்த 1ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தன்னுடைய வயதை 51 என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு வயசுதானே! என்று இதை சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. வேட்பாளர்கள் தங்களின் விவரங்களை ஒளிவு மறைவு இன்றி தெரிவித்தாக வேண்டும்.
எனவே வயசு விஷயத்தில் இப்படி மாற்றி மாற்றி சொல்லியிருப்பது விஜய்யின் மனு நிராகரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் சூழல் எழுந்தது. எனவேதான் விஜய் தற்போது கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார்.
மனைவி சங்கீதா
இது ஒருபுறம் இருக்க.. இன்னொருபுறம், மனைவி, மகன், மகள், தாய், தந்தை என அனைவருக்கும் கடன் கொடுத்திருப்பதாக விஜய் வேட்புமனுவில் கூறியிருக்கிறார். ஏற்கெனவே, விஜய்யின் மனைவி சங்கீதா, விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இப்படி இருக்கையில், தனக்கு விஜய் எந்த கடனையும் கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டால், அது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். விஜய் தேர்தலில் ஜெயித்தாலும் கூட, அவரது வெற்றி ரத்து செய்யப்படும் அளவுக்கு இது பிரச்சனையை ஏற்படுத்தும்.
எனவே உஷாரான விஜய், இது தொடர்பான கூடுதல் விவரங்களை தாக்கல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications