15 நாள் இல்லை.. அதிகபட்சமே ஒரு நாள் தான் டைம்! முதல்வரான பிறகும் விஜய்க்கு இருக்கும் பெரிய சிக்கல்
சென்னை: இன்று ஆளுநரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் எனச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், கர்நாடகாவில் எடியூரப்பா விவகாரத்தை மேற்கோள் காட்டும் சிலர், விஜய்க்குப் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும் என்கிறார்கள். இது தொடர்பாக விரிவாக நாம் பார்க்கலாம்!
தமிழ்நாடு தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, இன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், விஜய் கட்சிக்கு இப்போது 10 எம்எல்ஏக்கள் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இதற்காக அவர் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.

விஜய்
ஒருவேளை எல்லாமே திட்டமிட்டபடி நடந்தால்.. ஓரிரு நாட்களில் விஜய் முதல்வராகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது. இருப்பினும், அதன் பிறகு அவர் சட்டசபையில் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. அதை நிரூபிக்கவில்லை என்றால் ஆட்சி கவிழும்! இருப்பினும், 15 நாட்கள் இருப்பதால் அதற்குள் தேவையான பெரும்பான்மையைப் பெற முடியும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும் 15 நாட்களுக்குப் பதிலாக ஒரு நாள் மட்டுமே கூட டைம் வழங்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
கர்நாடகா
இதற்கு 2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த எடியூரப்பா விவகாரத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள்.. அதாவது அப்போது கர்நாடக தேர்தலில் 104 இடங்களைப் பெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், இது பெரும்பான்மைக்குத் தேவைப்பட்ட 112 இடங்களை விட 8 இடங்கள் குறைவாகும். எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அப்போதே ஆளுநர் அழைப்பு விடுத்தார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தார்.
இதனை எதிர்த்து காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அவசர மனுத் தாக்கல் செய்தது. அதில் குதிரை பேரம் நடக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அதில் "குதிரை பேரத்தைத் தவிர்க்க உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்" என்று கூறி, 15 நாள் அவகாசத்தை வெறும் 24 மணிநேரமாகக் குறைத்து உத்தரவிட்டது. பெரும்பான்மைக்குத் தேவையான 112 இடங்கள் இல்லாததால், எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே உணர்ச்சிகரமாகப் பேசி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஒரு நாள் மட்டும்
விஜய்யின் தற்போதைய நிலை எடியூரப்பாவின் நிலையை விடச் சற்று நெருக்கடியானது. எடியூரப்பாவுக்கு 8 இடங்கள் மட்டுமே தேவைப்பட்டன, ஆனால் விஜய்க்கு 10 இடங்கள் தேவைப்படுகின்றன. எனவே, எடியூரப்பாவைப் போலவே 24 மணி நேரம் மட்டும் கூட டைம் வழங்கப்படலாம். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை விஜய் அரசு எந்தவொரு முக்கியக் கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாது.
சிக்கல்?
எடியூரப்பா விவகாரத்தில், "பெரும்பான்மை என்பது நம்பர்களை பொறுத்தது; அதன் உண்மைத்தன்மை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்கப்பட வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அந்த நம்பர் தான் விஜய்க்கும் இப்போது தேவைப்படுகிறது. எனவே, விஜய்க்கு ஆளுநர் இரு வாரம் டைம் வழங்கினாலும் கூட அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் செல்ல அதிக வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், வெறும் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையைப் பெற வேண்டி இருக்கும்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications