ஸ்டாலின் பாணியில் தெருக்களில் சாதி பெயர்களை நீக்கும் விஜய்.. சென்னை மாநகராட்சியில் பெரிய மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த திமுக அரசு சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்களில் சாதி பெயர்களை நீக்குவதற்கு அரசாணை வெளியிட்டிருந்தது . அந்த அரசாணையின் படி சாதி பெயர்கள் நீக்கப்பட்டு வந்தது. சூழலில் தவெக அரசும் அதேபோன்று சாதி பெயர்களை நீக்கும் பணியினை தொடர்கிறது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தெருக்களில் சாதி பெயர் கொண்ட பெயர் பலகைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி இருக்கிறது. கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் சாதிப் பெயர்களுடன் உள்ள சுமார் 77 தெருப் பெயர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவை விரைவில் மாற்றப்பட உள்ளது. அதேபோல் மீதமுள்ள மண்டலங்களில் அடையாளம் காணும் பணி நடக்கிறது.

தமிழகத்​தில் குடி​யிருப்​பு​கள், சாலைகள், தெருக்​கள், நீர் நிலைகள், கிராமங்களுக்கு வைக்​கப்​பட்​டுள்ள சாதிப் பெயர்​களை நீக்​கு​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கி, தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் அரசாணை வெளி​யிட்டிருந்தது. குறிப்பாக கிராமங்​கள், குடி​யிருப்​பு​கள், சாலைகள், தெருக்​கள், நீர் நிலைகளின் சாதிப் பெயர்​களை நீக் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆதி திரா​விடர்காலனி, ஹரிஜன் குடி​யிருப்​பு, வண்​ணான்​குளம், பறையர் காலனி, சாதிபெயர்களுடன் சேரி என்று முடியும் பெயர்கள்போன்ற சாதிப்பெயர்​களை நீக்​கி புதிய பெயர்கள் வைக்க உத்தரவிடப்ட்டிருந்தது.
அந்த உத்தரவின் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சியில் சாதி பெயர்களை நீக்கும் நடவடிக்கை தற்போது தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

Vijay follows MK Stalin s model in the Chennai Corporation by removing caste names from streets

முன்னதாக இம்மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் மாநில அரசு அக்டோபர் 6-ஆம் தேதி 'அரசாணை 313' (GO 313)-ஐ வெளியிட்டது. சாதியைக் குறிப்பிடும் அல்லது சமூக பாகுபாட்டைத் தூண்டும் பொதுப் பெயர்களை அகற்றுவதற்கும் பெயர் மாற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல்களையும் நகராட்சி துறையின் அரசாணையில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு சமூக நீதித் துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், பொது உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்து தேவையான தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சென்னை மாநகராட்சியைக் கேட்டுக்கொண்டிருந்தது. இதனிடையே, இத்திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சமூக நீதித் துறையின் உத்தரவின்படி, தெருக்களை ஆய்வு செய்து மண்டல வாரியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் சாதிப் பெயர்களுடன் உள்ள சுமார் 77 தெருப் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள மண்டலங்களின் அறிக்கைகள் எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

அரசாணை வழிகாட்டுதலின்படி, ஒரு தெருவின் பெயரில் சாதிப் பெயர் பின்னால் வந்திருந்தால், அந்தப் பின்னால் உள்ள பகுதி மட்டும் நீக்கப்படும். ஒருவேளை முழுத் தெருவின் பெயருமே சாதியை மையமாகக் கொண்டு அமைந்திருந்தால், அந்தப் பெயர் முழுமையாக மாற்றப்படும். தற்போது ஆய்வில் உள்ள தெருக்களில் கெங்கு ரெட்டி சாலை, பிராமணர் தெரு, வன்னியர் தெரு, ரெட்டி தெரு மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள டாக்டர் நாயர் சாலை ஆகியவை உதாரணங்களாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் கே. வேணி கூறுகையில், "நாட்டின் பிற மாநிலங்களை விட நமது மாநிலம் சமூக நீதியில் சிறந்து விளங்குவதால், சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்களின் பெயர்களைக் கணக்கெடுக்கும் இந்த முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம். முந்தைய அரசு சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்களுக்கு மாற்றாக வேறு பெயர்களைப் பரிந்துரைத்த போதிலும், சமூக நீதிக்காகப் பாடுபட்ட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், எம்.சிங்காரவேலர் போன்ற தலைவர்களின் பெயர்களை அதில் சேர்க்கத் தவறிவிட்டது.

அவர்களின் பெயர்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்குமாறு அரசுக்குக் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்.. தற்போதைய புதிய அரசு, மறுசீமைக்கப்பட்ட பட்டியலில் அவர்களின் பெயர்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

ஏற்கனவே சில தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, ஜி.என்.செட்டி சாலை என்பது 'கோபதி நாராயணன் சாலை' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்கு மாம்பலத்தில் உள்ள சீனிவாச ஐயர் தெரு மற்றும் பாலகிருஷ்ண நாயக்கன் தெரு ஆகியவை 'சீனிவாச (ஐ) தெரு' மற்றும் 'பாலகிருஷ்ண (நா) தெரு' எனச் சுருக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+