Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவிலிருந்து வந்த 32 பேருக்கு.. சீட்டு கொடுத்த விஜய்.. இரட்டை இலையை காலி செய்யும் தவெக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று தவெக விஜய் வெளியிட்டார். இதில் அதிமுக மாஜி நிர்வாகிகள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது கவனம் பெற்றுள்ளது.

திமுக, அதிமுக என இரு துருவ அரசியலில் சிக்கிக் கிடக்கும் தமிழகத்தில், 'மூன்றாவது ஆட்டம்' ஆடத் தயாராகிவிட்டது தமிழக வெற்றி கழகம். இதில் ஹைலைட்டே, மற்ற கட்சிகளில் இருந்து தவெக பக்கம் தாவியிருக்கும் 'சீனியர்' முகங்கள் தான்.

tamil nadu assembly elections 2026 tvk

நேற்று தவெக வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியானது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார்.

தியாகராயர் நகர் - புஸ்ஸி ஆனந்த்
மயிலாப்பூர் - வெங்கட்ராமன்
வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா
கோபி - செங்கோட்டையன்
திருப்பரங்குன்றம் - நிர்மல் குமார்
திருச்செங்கோடு - அருண்ராஜ்
குமாரபாளையம் - விஜயலட்சுமி
சைதாப்பேட்டை - அருள்பிரகாசம்
எழும்பூர் - ராஜ் மோகன்
லால்குடி - கு.ப.கிருஷ்ணன்
திருப்பூர் வடக்கு - சத்தியபாமா
ஆயிரம் விளக்கு - ஜே.சி.டி.பிரபாகர்
கொளத்தூர் - வி.எஸ்.பாபு
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

யார் அந்த 32 + 9 + 21?

இப்படிப்பட்ட நிலையில் அரசியல் களத்தில் கணக்கு தீயாய் பரவி வருகிறது. 234 வேட்பாளர்களில் 32 பேர் அதிமுகவில் இருந்தும், 9 பேர் திமுகவில் இருந்தும், 21 பேர் பிற கட்சிகளில் இருந்தும் வந்தவர்கள் என்பது தான் அந்த 'பிரேக்-அப்'. இது அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் இல்லை என்றாலும், கள நிலவரம் இதற்கு நெருக்கமாகவே இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அதிமுக கூடாரத்தில் 'ஆபரேஷன்' விஜய்!

அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் விஜய்யின் தவெக செம ஸ்கோர் செய்திருக்கிறது.

கே.ஏ. செங்கோட்டையன்: 9 முறை எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் என அதிமுகவின் 'பில்லர்' ஆக இருந்தவர் இப்போது தவெக-வின் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளர். தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையம் தொகுதியிலேயே தவெக சார்பில் களம் காண்கிறார்.

சி.டி.ஆர். நிர்மல் குமார்: அதிமுகவின் ஐடி விங் முகமாக இருந்தவர், இப்போது விஜய்யின் தளபதியாக திருப்பரங்குன்றத்தில் மோதுகிறார்.

ஜே.சி.டி. பிரபாகர்: அதிமுகவின் மூத்த தலைவர், இப்போது தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டி.

இதுபோக, முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் (லால்குடி), முன்னாள் எம்.பி சத்தியபாமா (திருப்பூர் வடக்கு) என ஒரு படையே அதிமுகவில் இருந்து கிளம்பி வந்திருக்கிறது.

பாஜக-வில் இருந்தும் 'ஜம்ப்'!

பாஜக-வின் முக்கிய முகங்களாக இருந்த சிலரும் இப்போது 'வெற்றி' கழகத்தில் ஐக்கியம். குறிப்பாக, தேர்தல் வியூகம் மற்றும் பரப்புரையில் அனுபவம் வாய்ந்தவர்கள் தவெக-வின் முக்கிய பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேசிய கட்சிகளில் இருந்து வந்திருக்கும் இந்த 21 பேர், விஜய்யின் டெல்லி லாபி மற்றும் வடமாநில அரசியலை கையாள உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கோட்டையில் 'வி.எஸ். பாபு'!

திமுகவை பொறுத்தவரை பெரிய அளவில் விக்கெட்டுகள் விழவில்லை என்றாலும், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து வி.எஸ். பாபுவை களம் இறக்கி 'ஷாக்' கொடுத்திருக்கிறார் விஜய். முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் திமுகவின் உட்கட்சி அரசியலை நன்கு அறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேர்ந்தெடுத்திருக்கும் வேட்பாளர்கள் வெறும் சினிமா ரசிகர்களோ அல்லது புதியவர்களோ மட்டும் அல்ல. 'அனுபவம்' மற்றும் 'இளமை' என இரண்டையும் கலந்து ஒரு கலவையை உருவாக்கியிருக்கிறார். 23 பெண்கள், பல மருத்துவர்கள், பொறியாளர்கள் என லிஸ்ட் நீள்கிறது.

ஆனால், ஒரு கேள்வி எஞ்சுகிறது - மற்ற கட்சிகளில் சீட் கிடைக்காதவர்கள் தவெக-வுக்கு வந்தார்களா? அல்லது விஜய்யின் கொள்கை பிடித்து வந்தார்களா? இதற்குப் பதில் சொல்லப் போவது வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்காளர்கள் தான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+