பாஜக நிழலாக ஆளுநர்.. விஜய் முதல்வர் ஆக வேண்டும்! தவெகவுக்கு ஆதரவாக பேசிய தவாக! விளாசிய வேல்முருகன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை ஆட்சி அமைக்க இன்னும் ஆளுநர் அர்லேகர் அழைக்கவில்லை. இதற்கு, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தவெக தலைவர் விஜயை பதவி ஏற்க அனுமதிக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
108 தொகுதிகளில் வென்று தமிழகத்தின் தனிப் பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்தது. விஜய் முதல்வராக போகிறார் என அந்த கட்சியினர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் விஜய்க்கு தனது ஆதரவை தெரிவித்தது.
இந்நிலையில், இன்று 2வது நாளாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றார் விஜய். மேலும், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் தற்போது வரை ஆளுநர் அதற்கு செவி சாய்க்கவில்லை. பெரும்பான்மையை நிரூபித்தால் தான் ஆட்சி என ஆளுநர் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

தவாக வேல்முருகன்
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தவெக தலைவரை பதவி ஏற்க அனுமதித்து, பெரும்பான்மையை நிருபிக்க அவகாசம் அளிக்க வேண்டும் தவாக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில் தமிழக பொறுப்பு ஆளுனர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை 2 முறை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி. மீதமுள்ள ஆதரவைப்பெற பாஜக கூட்டணியில் இல்லாத விசிக, கம்யூனிஸ்ட் ஆதரவை கோரியுள்ளார்.
தனிப்பெரும்பான்மை
இதற்கிடையே காங்கிரஸ் ஆதரவை தெரிவித்துள்ளது. தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல் எழுத்துப்பூர்வ ஆதாரம் (documentary proof) மற்றும் 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுப் பட்டியல் (letter of support) வழங்குமாறு ஆளுனர் தவெக தலைவர் விஜயிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1989ம் ஆண்டு கர்நாடகாவில் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எஸ்.ஆர். பொம்மையின் ஆட்சியில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை விளக்கி கொண்டதாக ஆளுநருக்கு கடிதம் எழுதினர்.
சாசனப் பிரிவு 356
இதையடுத்து எஸ் ஆர் பொம்மை பெரும்பான்மையை இழந்துவிட்டதாக ஆளுநர் பெண்டேகண்டி வெங்கடசுப்பையா குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து சாசனப் பிரிவு 356ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமன் உத்தரவின் பேரில் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. இதனை எதிர்த்து எஸ் ஆர் பொம்மை உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
இதனை தொடர்ந்து 1994 ம் ஆண்டு இந்திய அரசியல் சாசன வரலாற்றில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு (Constitutional Bench) இவ்வழக்கை விசாரித்து முதல்வருக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை சட்டமன்றத்தில் நிரூபிக்க முடியும். அரசியல் சாசன சட்டம் 356 ஐ தவறாக பயன்படுத்தினால் ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்ற வரலாற்று சிறப்பு மிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆளுநர் உணரவேண்டும்.
கடும் கண்டனம்
இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அனைவரும் ஏற்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது. பாஜக ஆதரவில்லாத கட்சித்தலைவர்கள் அனைவரும் ஆளுநரின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் நிழலாக ஆளுனர்
எனவே பாஜகவின் நிழலாக ஆளுநர் செயல்பட்டு ஜனநாயக படுகொலை செய்யாமல், தமிழக வாக்காளர்களின் தீர்ப்பை ஏற்று தவெக தலைவரை பதவி ஏற்க அனுமதித்து, பெரும்பான்மையை நிருபிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.
-
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு











Click it and Unblock the Notifications