“ரெய்டு வந்தா டெல்லிக்கு வெள்ளை குடை பிடிப்பது யார்னு உங்களுக்கே நல்லா தெரியும்” - விஜய் பேச்சு!
சென்னை: “சென்னையில் டெல்லி டெல்லி என்று கூவுவதும், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்தால் டெல்லிக்கு வெள்ளைக்குடை பிடிப்பதும் யார் என்று உங்களுக்கே நல்லா தெரியும். ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி என சின்னப் பசங்க எல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்" என தவெக தலைவர் விஜய் இன்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்று வரும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, இன்று மார்ச் 4 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் அவர் பிரச்சாரம் செய்கிறார். கரூர் அசம்பாவித சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்பை நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றி ஒவ்வொரு கூட்டத்திற்கு 5,000 நிர்வாகிகளுக்கு பாஸ் கொடுத்து, பங்கேற்க வைத்து மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற திறந்தவெளி கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் வெயிலில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததை கருத்தில் கொண்டு, வேலூர் மாவட்டத்தில் பந்தல் அமைக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் இன்று நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதற்காக தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பில் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 4,900 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் முன்கூட்டியே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. திடலுக்குள் நுழைவதற்கு க்யூஆர் கோடு ஸ்கேன் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் அழைப்பிதழ் பெற்ற நிர்வாகிகள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
பெருமளவில் மக்கள் திரள்வதை தவிர்த்து, நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் கூட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து காவல் துறை சார்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும் இன்றைய கூட்டத்தில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற ஆர்வத்தில் தொண்டர்கள் உள்ளனர்.
முன்னதாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், "மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, மார்ச் 4ஆம் தேதி புதன்கிழமை, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், திருவையாறு உட்கோட்டம், செங்கிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அய்யாசாமிப்பட்டி பிரிவு சாலை எதிரில் பகல் 11 மணி முதல் 3 மணிக்குள் நடைபெற உள்ளது.
காவல்துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.

பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையிலான வாகனங்களிலோ பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும். காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஊடகவியலாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேரலை இணைப்பு (Live Feed) வழங்க உள்ளதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் ட்ரோன்களுக்கு அனுமதி இல்லை.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள கழக நிர்வாகிகளுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிர்வாகிகளின் வசதிக்காக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பங்கேற்பாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு BOX-களிலும், காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, 80% அளவில் மட்டுமே பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தஞ்சை செங்கிப்பட்டியில் பேசிய விஜய், நான் என்ன பேசினாலும் திரித்துப் பேச ஆரம்பித்து விட்டார்கள். தில்லுமுல்லு வேலைகளை எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள். சென்னையில் டெல்லி டெல்லி என்று கூவுவதும், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்தால் டெல்லிக்கு வெள்ளைக்குடை பிடிப்பதும் யார் என்று உங்களுக்கே நல்லா தெரியும்.
தமிழ்நாட்டை பிழைக்க வைப்பது திமுக தான், ஸ்டாலின் சார் தான் என்ற பேச்செல்லாம் வொர்க் அவுட்டே ஆகாது பாஸ்.. ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி என சின்னப் பசங்க எல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்" எனப் பேசியுள்ளார்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications