சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியை அவமதித்தாரா முதல்வர் விஜய்? உண்மையில் நடந்ததே வேறயாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் 17வது சட்டமன்றம் இன்று கூடிய நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுக்கொண்டனர். அப்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏவாக பதவியேற்கும் போது விஜய்யை நோக்கி வணக்கம் வைத்தது போன்றும், ஆனால் அதற்கு விஜய் எந்த ஒரு ரியாக்‌ஷனும் இல்லாமல் இருந்ததது போன்ற படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு நடந்த விஷயமே வேற என மற்றொரு படமும் இணையத்தில் பரவி வருகிறது.

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் நேற்று பதவியேற்றுக்கொண்ட நிலையில் இன்று சட்டசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் உள்பட எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

Vijay Ignore Edappadi Palaniswami Greeting Photo Sparks Debate But Another Angle Tells a Different Story

பதவியேற்ற எம்.எல்.ஏக்கள்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வரும் திமுக எம்.எல்.ஆவுமான ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களும் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டனர். எம்.எல்.ஏவாக பதவியேற்க வரும் போது தவெகவினர் முதல்வர் விஜய்க்கு வணக்கம் வைத்தனர். இதேபோல, ஓ பன்னீர் செல்வம் உள்பட எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சில எம்.எல்.ஏக்களும் விஜய்க்கு வணக்கம் வைத்தனர்.

கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்த விஜய்

பதிலுக்கு விஜய்யும் வணக்கம் வைத்தார். அதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏவாக பொறுப்பேற்க வரும் போது, முதல்வர் விஜய்யை பார்த்து வணக்கம் வைத்ததாகவும், பதிலுக்கு விஜய் எந்த சமிக்ஞையும் காட்டாமல் இருப்பது போல தெரிந்தது. இதை வைத்து பலரும் எடப்பாடி பழனிசாமியை மதிக்காமல் விஜய் அவமதித்துவிட்டதாக கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

சட்டசபையில் நடந்தது என்ன?

அதிமுகவினர் பலரும் விஜய்யின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முன்னாள் முதல்வர் வணக்கம் வைத்தால் பதிலுக்கு வணக்கம் வைப்பதுதான் மரபு என்று பதிவிட்டு வந்தனர். ஆனால், அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் மாற்று பார்வையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது விஜய்க்கு நேர் பின்னால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி பதவியேற்பதற்கு முன்பாக சட்டசபையில் இருந்த ஜெயலலிதா படத்தை பார்த்தே கும்பிட்டுவிட்டு பதவியேற்க திரும்பியதாக பலரும் கூறி வருகிறார்கள்.

விஜய்யின் அரசியல் நாகரீகம்

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று முடிந்ததும் முதல்வர் விஜய் இன்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் வீட்டிற்கு சென்றார். அங்கு மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

அதன் தொடச்சியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வீட்டிற்கும் விஜய் சென்று வாழ்த்து பெற்றார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதிமுகவில் உட்கட்சி குழப்பம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அவர் சந்திக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+