தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு!
சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்று லோக்போல் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் 2வது இடம் பிடித்துள்ளார். சுமார் 27.1 சதவிகித வாக்குகளை பெற்று விஜய் 2வது இடமும், 24.1 சதவிகித வாக்குகளை பெற்று எடப்பாடி பழனிசாமி 3வது இடமும் பிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 22 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் திமுக, அதிமுக, தவெக மற்றும் நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. டெல்டா, தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கை பெறும் திமுக, கொங்கு மண்டலத்திலும் கூடுதல் தொகுதிகளில் கைப்பற்ற தீவிரமாக உள்ளது.

அதேபோல் எடப்பாடி பழனிசாமி தனி மனிதராக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின் பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான லோக்போல் நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் திமுக சுமார் 181 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்ற கருத்துக்கணிப்பும் எடுக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 41% வாக்குகளை பெற்று முதல்வர் ஸ்டாலின் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தை 27.1% வாக்குகளை பெற்று விஜய் பிடித்திருக்கிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி 24.1% வாக்குகளை பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளி விஜய் 2வது இடத்திற்கு வந்திருப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தவெக முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிக வாக்குகளை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8 முதல் 10 சீட்டுகள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் லோக்பால் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல் அதிமுகவை விடவும் தவெகவின் வாக்கு சதவிகிதம் சில சதவிகிதம் அளவிற்கே குறைவாக ருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் அதிமுக - பாஜக கூட்டணி மொத்தமாகவே 29.5% வாக்குகளை மட்டுமே கைப்பற்றும் என்றும், கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு செலுத்தும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
-
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications