தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு நடைபெறவில்லை. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவதற்காக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தள்ளிப்போகிறதா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதிலும் தவெக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேச்சு எழுந்த நிலையில், இந்த பரபரப்புகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக பேச்சு நடப்பதாகவும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்க தயாராக இருப்பதாக பாஜக கூறியதாகவும் கடந்த சில தினங்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தனித்து விடப்பட்ட விஜய்
வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காண இருக்கிற விஜய்யின் தவெக, தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று கூறியிருந்தது. கூட்டணிக் கதவுகளை திறந்து வைத்து காத்திருந்த விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. மலை போல நம்பிய காங்கிரஸ் கட்சியும் தவெகவை காட்டி திமுகவுடன் பேர வலிமையை காட்டியதே தவிர தவெக பக்கம் வரவில்லை.
இதனால், தனித்து போட்டியிட வேண்டிய நிலைக்கு விஜய் தள்ளப்பட்டார். வரும் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க பேச்சு நடப்பதாக வெளியான தகவல் அதிக கவனம் பெற்றது. தவெக தரப்பில் இதனை மறுத்தாலும் பாஜக தரப்பில் பட்டும் படாமலே பதிலளித்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்?
இதனால் ஒருவேளை கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியாகும் தகவல் உண்மைதானோ என்ற ஐயப்படும் அளவிற்கு கடந்த சில நாட்களாக பேச்சு பலமாக அடிபட்டது. விஜய்யும் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் கடும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டு இருக்கும் நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.
அடுத்தடுத்த நெருக்கடிகளுக்கு இடையேதான் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய இருப்பதாக பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. விஜய் வந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும் என்றும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரும் சவாலாக இது இருக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறினர்.
எடப்பாடி பழனிசாமி பதில்
இந்த நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைவதாக தகவல் பரவுகிறதே? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நீங்கள்தான் இப்படி பரப்புகிறீர்கள்.
நீங்களாக ஒரு கற்பனை செய்து கொண்டு பரப்பினால் நாங்கள் என்ன செய்ய முடியும். அப்படி எதுவும் இல்லை. தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நடத்துவீர்களா? என்று கேட்கிறீர்கள். கற்பனையான கேள்வியை கேட்க கூடாது. அது தான் இல்லை என்று சொல்லிவிட்டேன்" என்றார்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications