Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார் பெரம்பூர் தொகுதியில் நிற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். அதில் தனது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை தெரிவித்திருக்கிறார். அதில், 2020 முதல் 2025 வரை விஜயின் வருமானம் குறித்த தகவல்களை தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் அதிகபட்சமாக 2021 - 2022-ம் நிதி ஆண்டில் 237 கோடியே 46 லட்சத்து 69 ஆயிரத்து 950 ரூபாய் வருமானம் வந்ததாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம். இந்த தேர்தலில் முதன்முறையாக போட்டியிடுகிறார் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் ஆன விஜய்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அவர் போட்டியிடும் நிலையில் இன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் சென்னை நீலாங்கரையில் வசிக்கும் சந்திரசேகர் என்பவரின் மகனான 52 வயதுடைய ஜோசப் விஜய் என தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக தான் இருப்பதாகவும் விஜய் கூறியிருக்கிறார். அதில் தனது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, சமூக வலைதள கணக்குகளின் விவரங்களை கொடுத்துள்ள விஜய் தனது குடும்பத்தினரின் பான் கார்டு, வருமான வரி கணக்கு உள்ளிட்டவற்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் தனது மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டுள்ள விஜய் தன்னைத் தவிர வேறு யாரும் வருமானம் ஈட்டவில்லை எனக் கூறியிருக்கிறார். இந்த நிலையில் அந்த அபிடவிட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் தனது வருமானம் குறித்து தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த 2020-2021 ஆம் நிதி ஆண்டில் 8 கோடியே 40 லட்சத்து73 ஆயிரத்து 70 ரூபாய் வருமானம் வந்ததாக விஜய் கூறியுள்ளார். 2021-2022 ஆம் நிதி ஆண்டில் அதிகபட்சமாக 237 கோடியே 46 லட்சத்து 69 ஆயிரத்து 950 ரூபாய் வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
2022 -2023 ஆம் நிதி ஆண்டில் 198 கோடியே 71,35,440 வருமானமும், 2023 - 2024 ஆம் நிதி ஆண்டில் 105 கோடியே 69 லட்சத்து 24 ஆயிரத்து 310 ரூபாய் 20 28 53 லட்சத்து 56 ஆயிரத்து 290 ரூபாய் வருமானம் வந்ததாக விஜய் கூறி இருக்கிறார். இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் விஜய் 700 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி இருப்பதாக தனது வருமான வரி கணக்கு தாக்கல் நிலை குறித்த விவரங்களை தெரிவித்திருக்கிறார்.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங்












Click it and Unblock the Notifications