"தளபதி டிவி".. சொந்தமாக சேனல் தொடங்கும் விஜய்! தமிழக வெற்றி கழகத்தின் சுளீர் பிளான்! பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக முக்கியமான சில திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம்.

நடிகர் விஜய் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளாராம். முக்கியமாக 2026 சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்கிறார்கள். விரைவில் அவர் தான் போட்டியிட போகும் தொகுதியில் 3ம் பொதுக்கூட்டத்தை நடத்துவாராம். அதை தொடர்ந்து தேர்தல் பணிகளை அவர் தொடங்க உள்ளாராம்.

TVK Vijay Madurai

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரின் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

விஜய் தமிழக வெற்றிக் கழகம் சேனல்

தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். அதன்படி புதிதாக ஒரு சேனலை தொடங்கலாம். ஆனால் புதிதாக சேனலை தொடங்கினால் அனுமதி வாங்குவது தொடங்கி அதை பிரபலம் செய்வது வரை பல விஷயங்கள் கஷ்டமாகும்.

அதே சமயம் ஏற்கனவே உள்ள சேனலை வாங்கினால்.. அதை எளிதாக பிரபலப்படுத்த முடியும். இதனால் ஏற்கனவே உள்ள விஜய்காந்த்தின் கேப்டன் டிவியை விஜய் வாங்க பேசி வருகிறாராம். ஆனால் விஜயகாந்த் டிவி கிடைக்கவில்லை என்றால் ஏற்கனவே தொடங்கி செயல்படாமல் இருக்கும் ஒரு மியூசிக் சேனலை வாங்கவும் திட்டமிட்டு உள்ளாராம்.

விஜய் தொடங்கும் சேனல் - பெயர் என்ன?

தளபதி டிவி என்ற பெயரில் சேனலை நடத்தும் திட்டத்தில் விஜய் இருக்கிறாராம். விஜய் டிவி என்று ஏற்கனவே உள்ளது. இதனால் அதே பெயரை வைக்க முடியாது. அதனால் வேறு பெயரை வைக்க நடிகர் விஜய் முடிவு எடுத்துள்ளாராம். இதற்காக தளபதி டிவி என்ற பெயரை வைக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம்.

எங்கே போட்டி

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விஜய் தென் மண்டலத்தில் போட்டியிட உள்ளாராம். முக்கியமாக திருச்சி அல்லது நெல்லையில் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளாராம். இங்கே இருந்து எளிமையாக எம்எல்ஏ ஆகலாம் என்ற நம்பிக்கை காரணமாக அவர் நெல்லை அல்லது திருச்சியில் இருந்து களமிறங்க வாய்ப்பு உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி தற்போது ஒரு முக்கிய சவாலை எதிர்கொள்ள தொடங்கி உள்ளது. கட்சியில் விஜய்யைத் தவிர, வேறு பெரிய முகங்கள் இல்லை. இது தொடர்பாக விஜய்க்கும் முக்கியமான மெசேஜ் ஒன்று சென்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

பொதுவாக, தமிழக அரசியல் கட்சிகளில் பல வலுவான தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் அல்லது நன்கு அறியப்பட்ட பொது முகங்கள் இருப்பார்கள். இவர்கள் தேர்தல்களில் போட்டியிடக்கூடியவர்கள். இத்தகைய தலைவர்கள் கட்சி மக்களைச் சென்றடையவும், உள்ளூர் ஆதரவைப் பெறவும் உதவியாக இருப்பார்கள்.

விஜய் - தமிழக வெற்றிக் கழகம்

எம்ஜிஆர் அரசியலில் வந்து ஜெயிக்க காரணம்.. அவருடன் பல திமுக தலைவர்கள் உடன் இருந்தனர். திமுகவில் இருந்து வெளியேறிய டாப் தலைவர்கள் அவருடன் உடன் இருந்தனர். அதேபோல்தான் ஜெயலலிதாவிற்கும் உதவியாக பல மூத்த இரண்டாம் கட்ட தலைவர்கள் இருந்தனர். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில், கிட்டத்தட்ட அனைத்து கவனமும் விஜய் மீதே குவிந்துள்ளது. இது கட்சிக்கு ஒரு வலுவான வேட்பாளர் பட்டியலைத் தயாரிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளவர்களில் பலர் விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியலுக்குப் புதியவர்கள். திமுக, அதிமுக அல்லது பிற கட்சிகளின் வலுவான வேட்பாளர்களுடன் போட்டியிட அவர்களுக்குப் போதிய அனுபவம், நிதி ஆதாரம் அல்லது பொது செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம். இதனால், பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களை யார் வழிநடத்துவார்கள், உள்ளூர் பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட தலைவர்களைக் கட்சியால் ஈர்க்க முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன.

இப்படிப்பட்ட நிலையில்தான் கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல ஒரே வழி டிவி சேனல்தான் என்பதால் தனியாக டிவி சேனல் தொடங்க விஜய் திட்டமிட்டு வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+