5 மாதத்தில் எப்படி பணம் இவ்வளவு வந்துச்சு.. நிஜ வாழ்க்கையில் விஜய் வில்லன்.. தினகரன் புகார்

Subscribe to Oneindia Tamil

தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையவுள்ளது. தாராபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் கைது செய்து விசாரணை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பானது. நேர்மை என்று சொன்னவர்களுக்கு 5 மாதத்தில் இவ்வளவு பணம் எப்படி வந்தது. விஜய் நிஜ வாழ்க்கையில் வில்லன் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தாராபுரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுக மாவட்ட செயலாளர் செல்வகுமாரனை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கிறார்கள். இது இந்த தொகுதியில் நடந்த சம்பவம் இல்லை. எங்கோ ஒரு பகுதியில் நடந்ததற்கு இந்த தொகுதியில் விசாரிப்பதற்கு என்ன தேவை இருக்கிறது. வருமானவரித்துறையினரோ, அமலாக்கத்துறையினரோ பறிமுதல் செய்தால் மட்டுமே விசாரிக்க முடியும்.

vijay-is-real-life-villain-said-ttv-dinakaran

ஜோசியர் சொன்னதற்காக

ஏதோ ஒரு இடத்தில் எடுப்பதற்கும், தொகுதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. விஜய்க்கு தோல்விய பயம் வந்துவிட்டது. மதுராந்தகத்தில் ரோடு ரோடாக நடந்துவிட்டு, தாராபுரத்திலும் நடக்கிறார். ஜோசியர் சொன்னார் என்பதற்காக பகலில் சுற்றி கொண்டிருக்கிறார். அதேபோல தாராபுரத்திலும் சுற்ற போகிறார். தேர்தலில் தவெக தோற்பது உறுதியாகிவிட்டது. அவர்கள் கட்சியே அவர்கள் கதையை முடித்துவிடும். இந்த தேர்தலை திணித்ததே விஜய் தான். தவறான முன் உதாரணத்தை உருவாக்கியுள்ளார்.

இரட்டை இலையிடம் வசமாக மாட்டிவிட்டார். உறுதியாக தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெறும். ஓட்டுக்கு நயா பைசா கொடுக்க மாட்டோம் என்றார்கள். சேலம் உள்ளிட்ட பல பொதுத் தொகுதிகளில் அவர்கள் பணம் கொடுத்தார்கள். ஆனால் கொடுக்கவில்லை என்று பொய் சொல்கிறார்கள். அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தவர்கள் எல்லாம், விஜய் ரசிகர்களா பிளாக் டிக்கெட் விற்றவர்களா. எம்எல்ஏக்களை எல்லாம் ஏமாற்றி என்னென்ன செய்தார்கள் என்று தெரியும். உண்மையை சொன்னால் வேட்பாளர் அழுகிறார்.

விஜய் வில்லன்

நாங்கள் சொன்னால் ஏதோ தவெக மீது பொறாமையில் சொல்கிறார்கள் என்பார்கள். தவெக ஆட்சிக்கு ஆதரவளித்த சிபிஎம் சண்முகம், சிபிஐ வீரபாண்டியனுமே இந்த குற்றச்சாட்டை சொல்கிறார்கள். தவெகவின் சாயம் வெளுக்கிறது. விஜய் சினிமாவில் தான் ஹீரோ. நிஜ வாழ்க்கையில் வில்லன். அதை அரசியலில் ஒவ்வொரு நாளும் நிரூபித்து கொண்டிருக்கிறார். இந்த தேர்தலில் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. கவர்னர் ஆட்சி வந்துவிடகூடாது என தவெகவுக்கு ஆதரவளித்த, கம்யூனிஸ்ட்களே தவறை உணர்ந்து விமர்சிக்கிறார்கள்.

இதை மக்களும் பார்க்கிறார்கள். இவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம். நேர்மையானவர்கள் என்று சொன்னார்கள். மக்கள் வரிப்பணத்தை தொட மாட்டோம். தொட்டால் விட மாட்டோம் என்றார்கள். 5 மாதங்களில் இவ்வளவு பணம் எப்படி வந்தது. அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பவர்களையும், பட்டு வேஷ்டி கட்டி மைனர் போல வருவோரால் எதவும் நடக்கதது. மக்கள் ஏமாந்து வாக்களித்துவிட்டனர். இடைத்தேர்தலில் உரிய பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+