நடிகர் விஜய்க்கு சீமான் சூட்டிய ' அந்த பட்டம்'..ரஜினி ரசிகர்கள் டென்ஷன் - ஓயாதோ அக்கப்போர் சர்ச்சை!
சென்னை: தமிழ் திரையுலகின் 'உச்ச நட்சத்திரம்' தம்பி விஜய் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மகுடம் சூட்டி பாராட்டி இருப்பது புதிய விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
தமிழ் திரை உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது குறித்து அண்மையில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருகிறார். இப்போதும் ஆக்டிவ்வாக பீல்டில் இருக்கும் போதே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற விவாதம் நடைபெறுகிறது.

சரத்குமார் பேசியது: அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் ரசிகர்களுக்கும் இடையே ஏகப்பட்ட உரசல்கள். சமூக வலைதளங்களிலும் இதுதான் விவாதமாக களைகட்டியது. வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், தம்பி விஜய்தான் சூப்பர் ஸ்டார் என அடித்து பேச அதகளமாகிப் போனது திரை உலகம்.
ஒரே சூப்பர் ஸ்டார்: நடிகர் விஜய் மட்டுமல்லாமல் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பலரையும் இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கான ரேஸில் ஓடவிட்டு 'வெட்டு குத்து' 'ரத்த களரி' ரேஞ்சுக்கு ரசிகர்கள் இடைவிடாமல் சமூக வலைதளங்களில் பஞ்சாயத்து செய்து கொண்டே இருக்கின்றனர். திரை விமர்சகர்கள் சிலர், சமூக வலைதளங்களில் வாக்கெடுப்பு எல்லாம் நடத்தி இந்த அக்கப்போரை கூர்மைப்படுத்தி இருந்தனர். அண்மையில் லியோ வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார், ஒரே ஒரு தளபதி என்றெல்லாம் பேசி இருந்தார்.
எனது பிறந்தநாளில் நேரிலும், தொலைபேசியிலும், இணையவெளியிலும் தங்களது பேரன்பினையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கும், திரைத்துறை ஆளுமைகளுக்கும், காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கும், அனைத்து நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பு உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,… pic.twitter.com/0LzAP2qGir
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) November 9, 2023
சீமானுக்கு விஜய் வாழ்த்து: தற்போது நடிகர் விஜய்க்கு 'தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம்' என மகுடம் சூட்டி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தொடர்ந்து ஆதரித்து வருகிறார் சீமான். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் கூட்டணி அமைப்பது குறித்து பேசுவோம் என தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சீமான் 57-வது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய், தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
உச்ச நட்சத்திரம் விஜய்: சீமான் இன்று தமக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்கள் பட்டியலை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். நமது ஒன் இந்தியா தமிழ் உள்ளிட்ட ஊடகங்களுக்கும் சீமான் நன்றி தெரிவித்திருக்கிறார். இதில் நடிகர் விஜய் குறித்து " தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம்" தம்பி விஜய் என குறிப்பிட்டிருக்கிறார் சீமான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் தம்பி விஜய் என சீமான் மகுடம் சூட்டியிருப்பது புதிய விவாதங்களையும் உருவாக்கி இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications