Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் லீக்.. குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது! பிரதமர் மோடி தலையிடணும்.. IMPPA சங்கம் டிமாண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சட்ட விரோதமாக இணையத்தில் கசிந்த்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சைபைர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இந்த படம் லீக் ஆன விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் எனவும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (IMPPA) வலியுறுத்தியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் சான்று பிரச்சினையால் ஜனநாயகன் படம் தற்போது வரை வெளியாகவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இனி தேர்தலுக்கு பிறகு ஏப்ரல் 30 அல்லது அதற்கு பிறகு தான் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் முழு படமும் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vijay Jana nayagan Movie Leak - PM Modi Must Intervene Producers Association urge

ஜனநாயகன் திரைப்படம்

ஜனநாயகன் திரைப்படம் இன்னும் திரையிலேயே வெளியாகாத சூழலில், சட்டவிரோதமாக இணையத்தில் எப்படி லீக் ஆகியிருக்கும் என திரையுலகு மட்டும் இன்றி அரசியல் ரீதியாகவும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லீக் செய்தது யார் என அரசியல் கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் தான் ஜனநாயகன் திரைப்படத் திருட்டுக்குக் காரணமானவர்கள் மீது உடனடியாகவும் கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (IMPPA) பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மிகுந்த கவலையைத் தருகிறது

ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக லீக் செய்தது யார்? எப்படி லீக் செய்தனர்? இதற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும் மேலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்பா கடிதம் எழுதியிருக்கிறது. இது தொடர்பாக இம்பாவின் தலைவர் அபய் சின்ஹா கூறியதாவது:- "தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிரித்து இருக்கும் சூழலில் கூட இது போன்ற திரைப்படத் திருட்டு என்ற அடிப்படைப் பிரச்னையை இன்னும் திறம்படக் கையாள முடியாமல் இருப்பது மிகுந்த கவலையைத் தருகிறது.

டெலிகிராம், டோரண்ட் தளங்கள் மற்றும் தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணைய வழிகள் மூலம் திரைப்படத் திருட்டு அதிகரிப்பதாக இம்பா பலமுறை புகார் அளித்தும், அத்தளங்கள் தொடர்ந்து தடையின்றிச் செயல்படுகின்றன. இதனால், தயாரிப்பாளர்களுக்கும், இதில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் மிகப்பெரிய நிதி இழப்பும் பாதிப்பும் ஏற்படுகிறது. 'ஜன நாயகன்' திரைப்படம் தொடர்பான இந்த விவகாரத்தில் மோடியின் கவனத்திற்காக இதை கொண்டு சென்றுள்ளோம்.

நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது

ஜனநாயகன் திரைப்படம் ஒரு ஆண்டுகளாக சூட்டிங் நடத்தப்பட்டு, எண்ணற்றவர்கள் உழைப்பில் உருவானது. கடந்த ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று திட்டமிடப்பட்டது. இதற்காகத் தணிக்கைச் சான்றிதழுக்கும் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், பல காரணங்களால் ஏற்பட்ட தொடர்ச்சியான தாமதங்கள் மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக இன்று வரை சான்றிதழும் வெளியாகவில்லை. இதனால் படத்தை திரையரங்கில் வெளியிட முடியவில்லை.

தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் இத்தகைய தாமதங்கள், திரைப்பட வெளியீட்டு தேதிகளையும், நிதித் திட்டங்களையும் சீர்குலைக்கிறது. சரியான நேரத்தில் சான்றிதழும், வெளியீடும் இல்லாததால், தற்போது இந்தத் திரைப்படம் சட்டவிரோதமாகத் வெளியிடப்பட்டு, தயாரிப்பாளர் உள்ளிட்ட பலருக்கும் கணிசமான நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, 'ஜன நாயகன்' திரைப்படத் திருட்டுக்குப் பொறுப்பானவர்கள் மீது உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+