தவெக அமைச்சரவையில் இஸ்லாமியர் இல்லாதது ஏமாற்றம்.. விஜய்க்கு ஜவாஹிருல்லா வைத்த கோரிக்கை!
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர் கூட இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். தவெகவில் 3 இஸ்லாமியர்கள் வெற்றி பெற்றுள்ளதாக கூறிய ஜவாஹிருல்லா, அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். தவெக அரசுல்க்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் சட்டசபைக் குழு தலைவர் ராஜேஷ் குமார் உரையாற்றினார்.

தொடர்ந்து விசிக சார்பாக வன்னி அரசு, தேமுதிக சார்பாக பிரேமலதா, பாஜக சார்பாக போஜராஜன், பாமக சார்பாக செளமியா அன்புமணி, சிதம்பரம் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஆகியோர் பேசினர். இதன்பின் மனிதநேய மக்கள் கட்சியின் எம்எல்ஏ ஜவாஹிருல்லா பேசுகையில், மகளிர் உரிமை தொகை, விடியல் பேருந்து பயணம், மருத்துவ சேவை, பள்ளிக் கல்வி, உயர் கல்வி மேம்பாடு திட்டங்கள் பலருக்கும் பயன் அளித்தன.
தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த 9 திட்டங்களை திமுக நடைமுறைப்படுத்தியது. நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், காலை உணவுத் திட்டம் என்று அடுக்கி கொண்டே போகலாம். திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு இந்த புதிய அரசிலும் தொடர வேண்டும். தமிழக அரசு நிகழ்ச்சிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்க கூடாது. இந்தியை திணிக்கு எதிராக தவெக அரசு கொள்கை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தவெக அரசின் அமைச்சரவையில் ஒரு முஸ்லீம் கூட இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. காமராசர் முதல்வராக இருந்த போது, அவரின் அமைச்சரவையில் ஒரு முஸ்லீம் கூட இல்லை. அப்போது பேரரறிஞர் அண்ணா பேசும் போது, உங்கள் அமைச்சரவையில் ஒரு முஸ்லீமிற்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
கடையநல்லூர் எம்எல்ஏ மஜீத்துக்கு அந்த வாய்ப்பை அளிக்கலாமே என்று கோரிக்கை வைத்தார். உடனடியாக காமராசர் அந்த கோரிக்கையை ஏற்று மஜீத்துக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்தார். தவெக சார்பாகவும் 3 முஸ்லீம் எம்எல்ஏ-க்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு அமைச்சரவை வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
பக்ரீத் பண்டிகை.. நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்.. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை












Click it and Unblock the Notifications