’அப்பா’ பக்கம் சாயும் ’அம்மா’ கட்சி? திமுகவுக்கு தினகரன் சப்போர்ட்? ஏகப்பட்ட டென்ஷனில் எடப்பாடி!
சென்னை: விஜய் - கரூர் விவகாரத்தையடுத்து தமிழக அரசியலில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், விஜயை மிகக் கடுமையாக எதிர்த்து வந்த சிலர் ஆதரவாகப் பேசி வரும் சூழலில், திமுகவையும் எதிர்த்தவர்கள் தற்போது ஆதரவாக பேசத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் எடப்பாடியின் விஜய் ஆதரவு நிலைப்பாட்டால், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திமுக ஆதரவு நிலைப்பட்டை எடுத்திருப்பது தமிழக அரசியலில் குறிப்பிடத்தகுந்த மாற்றமாக பார்க்கப்படுகிறது.
கரூரில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட 41 உயிரிழப்புகளுக்கும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடந்ந்த நிகழ்வும் அந்த கட்சிக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது
அதே நேரத்தி தமிழக அரசியலிலும் இந்த சம்பவம் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கரூர் சம்பவம்
குறிப்பாக, விஜயை கடுமையாக எதிர்த்து வந்தவர்கள் கூட இப்போது அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். அதேபோல், திமுகவுக்கு எதிராகக் கடுமையாக விமர்சித்து வந்த சிலர் தற்போது அந்தக் கட்சிக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இந்த மாற்றத்திற்குச் ஆட்பட்டிருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நிலையில், தினகரன் திமுக அரசின் நடவடிக்கைகளை பாராட்டியிருப்பது, தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.
டிடிவி தினகரன்
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட தினகரன், தனது சொந்தக் கட்சியான அமமுகத்தைத் தொடங்கி, பின்னர் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தார். ஆனால் பாஜக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை அவர் கடுமையாக எதிர்த்து, "இபிஎஸை தவிர வேறு யாரையும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் தான் கூட்டணியில் தொடர்வோம்" என்று அறிவித்தார். இதன் மூலம் பாஜகவுடனான உறவு முறிந்தது.
திமுக கூட்டணி
இதற்கிடையில், தினகரன் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. த.வெ.கவுடனும் அவர் அணுகுமுறை வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், கரூர் சம்பவம் இந்த விவாதங்களுக்கு புதிய திசையைத் தந்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்
செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "கரூர் சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் மிகவும் நிதானமாக செயல்பட்டார். பல்வேறு தரப்புகள் விஜயை கைது செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தபோதிலும், அவர் அனுபவத்துடன் இந்த நிலையை கையாண்டார். எந்தக் கட்சித் தலைவரு, தனது தொண்டர்களும் நிர்வாகிகளும் உயிரிழப்பதை விரும்பமாட்டார் என்ற முதல்வரின் கருத்து மிகவும் சரியானது" என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணி சாத்தியம்
அதே நேரத்தில், "இதற்காக நான் திமுக அரசுக்கு ஆதரவளிக்கிறேன் என்று எண்ண வேண்டாம்" எனவும் தினகரன் விளக்கம் அளித்தார். ஆனால், அரசியல் விமர்சகர்கள், அவரது இந்தக் கருத்து, திமுகவுடனான எதிர்கால கூட்டணிக்கான சாத்தியத்தைக் குறிக்கும் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது என்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தினகரனின் இந்தச் சமீபத்திய நிலைப்பாடு, தமிழக அரசியல் வரைபடத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கக் கூடியதாக உள்ளது. அமமுக - திமுக கூட்டணி சாத்தியம் குறித்த கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தினகரன் எப்போதும் திமுக கூட்டணிக்குச் செல்ல மாட்டார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications