முன்னாள் சபாநாயகர் மகன் லோகேஷுக்கு இடைக்கால சபாநாயகர் பதவி? எடப்பாடிக்கும் பதவிப்பிரமாணம் செய்வார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் தற்காலிக சபாநாயகராக விஜய் நியமிப்பார் என சொல்லப்படுகிறது. இவர் ராசிபுரம் தனி தொகுதியில் அமைச்சர் மதிவேந்தனை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. அப்படி பார்த்தாலும் விஜய் 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளார். ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு விஜய், ஆளுநர் கர்லேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்களுக்கு கால அவகாசம் கேட்டுள்ளார்.

vijay tvk

விஜய் 108 இடங்களில் வென்றிருந்தாலும் அவரது பலம் 106 தான் (சபாநாயகர் வாக்கெடுப்பில் வரமாட்டார், திருச்சி கிழக்கு). எனவே பெரும்பான்மைக்கு 12 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனினும் சரியாக 118 எண்ணிக்கை என்பது எப்போதும் டேஞ்சர் என்பதால் 14 பேரின் ஆதரவையாவது பெறுவது என்பது அவசியமானது.

இந்த நிலையில் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் இடைக்கால சபாநாயகர் ஒருவர் தேவை. அவர்தான் எல்லா எம்எல்ஏக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

அந்த இடைக்கால சபாநாயகர் யார் என்பது இப்போதைய கேள்வி. முதலில் ராஜ்மோகனாக இருக்கலாம் என்றார்கள். ஆனால் தற்போது கிடைத்த தகவலின்படி முன்னாள் சபாநாயகரின் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வனை நியமிக்க விஜய் முடிவு எடுத்துள்ளார் என்கிறார்கள்.

அதிமுகவில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு லோகேஷ் தோல்வி அடைந்தார். இதையடுத்து 2026 சட்டசபை தேர்தலில் தனது தந்தையின் சொந்த தொகுதியான ராசிபுரத்தை கேட்டிருந்தார்.

ஆனால் அதிமுகவில் லோகேஷுக்கு சீட் இல்லை என்ற விஷயத்தை அறிந்த லோகேஷ், உடனடியாக தவெக பக்கம் தாவிவிட்டார். அவருக்கு ராசிபுரம் தொகுதியில் போட்டியிட விஜய் வாய்ப்பு வழங்கினார்.

இந்த நிலையில் ராசிபுரத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் மதிவேந்தனை 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லோகேஷ் தோற்கடித்தார்.

பொதுவாக அமைச்சர்களை தோற்கடிப்பவர்கள், முக்கிய வேட்பாளர்களை தோற்கடிப்பவர்களுக்கு ஏதாவது நல்ல பதவி கிடைக்கும். அந்த வகையில் லோகோஷ்தான் இடைக்கால சபாநாயகர் என சொல்கிறார்கள்.

அவர்தான் எல்லா எம்எல்ஏக்களுக்கும், அதாவது எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார். பொதுவாக வயதில் மூத்த நபரைத்தான் இடைக்கால சபாநாயகராக நியமிப்பது வழக்கம்.

ஆனால் விஜய் லோகேஷை பரிந்துரை செய்வது நடைமுறையில் சாத்தியமா, இல்லை ஆட்சியில் அமரும் அந்தந்த கட்சிகளின் விருப்பமா என தெரியவில்லை. சட்டசபை சபாநாயகராகவும் லோகேஷையே விஜய் முன்னிறுத்துவாரா, இல்லை வி.எஸ்.பாபு அல்லது ஜேசிடி பிரபாகரனுக்கு தருவாரா என தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+