ரஜினி வருவதற்கு முன் அரசியல் கணக்கை அசால்ட்டாக துவங்கிய விஜய்.. உள்ளாட்சி தேர்தலில் மாஸ் சாதனை!
சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தினர் அதிக பேர் வென்று இருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி தவிர்த்து, நாம் தமிழர் கட்சி மிக சிறப்பாக செயல்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தினரும் இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

எத்தனை
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தினர் அதிக பேர் வென்று இருக்கிறார்கள். வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டு இவர்கள் வென்றுள்ளனர். அதே சமயம் இவர்கள் தங்களை விஜய் மக்கள் இயக்கம் என்று கூறிதான் பிரச்சாரம் செய்துள்ளனர்.

யார் வெற்றி
அதன்படி விஜய் மக்கள் இயக்க மாவட்ட துணைச் செயலாளர் கலைவாணன் லால்குடி ஒன்றியம் சிறுமருதூர் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினராக தேர்வாகி உள்ளார். இவர் விஜய் மக்கள் இயக்கத்தில் மிக முக்கியமான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு யார்
இன்னொரு பக்கம் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிரணி நிர்வாகி சங்கீதா, மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் கிராம ஊராட்சி 5வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்று இருக்கிறார். பெரிய பணம் பலம் இல்லாமல், பிரச்சாரம் மூலமே இவர் இந்த சாதனையை செய்துள்ளார்.

சாதனை
மேலும் விஜய் மக்கள் இயக்க ஒன்றிய விவசாய அணி செயலாளர் லோகேஸ்வரன் திருச்சி தொட்டியம் ஒன்றியம் ஆரங்கூர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.மேலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாக சரவணன், திருவெறும்பூர் ஒன்றியத்தில் வார்டு உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.

எப்படி
இவர்கள் எல்லாம் விஜய் மக்கள் இயக்கத்தில் மிக முக்கியமான உறுப்பினர்கள், நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இவர்கள் தங்கள் பகுதிகளில் நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளனர். அதன் பயனாக இவர்கள் தற்போது தேர்தலில் வென்று உள்ளனர்.

ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக பல வருடமாக கூறி வருகிறார். இரண்டு வருடம் முன் அவர் அரசியல் அறிவிப்பை வெளியிட்டும் கூட இன்னும் அரசியலுக்கு வரவில்லை. இந்த நிலையில்தான் தற்போது நடிகர் விஜய் அமைதியாக தனது அரசியல் கணக்கை துவங்கி உள்ளார்.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications