மே 28.. விஜய் போட்ட உத்தரவு.. “ஒரு நாள்” மாஸ் பிளான்.. 234 தொகுதிகளிலும் பரபரக்கும் ஏற்பாடுகள்!
சென்னை : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு நடிகர் விஜய் தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும், அண்டை மாநிலங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மே 28ஆம் தேதி அன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நாள் ஆண்டுதோறும் உலக பட்டினி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு ஏழைகளின் பசியைப் போக்கிடும் வகையில் விழிப்புணர்வுக்காக, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 'தளபதி ஒரு நாள் மதிய உணவு சேவையகம்' என்ற திட்டம் மூலமாக ஏழை, எளிய மக்களுக்காக உணவு வழங்குமாறு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விஜய் சொல்லுக்கிணங்க, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 'தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்' திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்படும்.

வரும் மே 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 11 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் இதர பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு ஒருவேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமன்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தளபதி விஜய் மக்கள் இயக்கம் இந்த நலப்பணியை மேற்கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை!












Click it and Unblock the Notifications