"ஜெகன் அண்ணா..." டிமான்ட் வைத்த விஜய்! சிரித்தப்படியே தலையை ஆட்டிய ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி
சென்னை: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென் விஜய், அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்க அதற்கு ஜெகனோ, தலையை ஆட்டி சிரித்தாராம். அப்படி என்ன கேட்டிருப்பார் விஜய் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தனது அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் ஒவ்வொரு முறையும் பேசி வந்தார்.

அதிமுகவை அவர் விமர்சிக்காமல் இருந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், "நான் ஒரு கட்சியை மட்டும் எதிர்ப்பதாகவும் மற்றொரு கட்சியை எதிர்ப்பது இல்லை என கூறுகிறார்கள். இது சட்டசபை தேர்தல், அதனால்தான் திமுகவை விமர்சிக்கிறேன். மக்களால் பலமுறை டெலிட் செய்யப்பட்டவர்களை பற்றி நாம் ஏன் பேச வேண்டும்" என பேசியிருந்தார்.
அதாவது இத்தனை நாள் கூட்டத்திற்கு பிறகு சேலம் கூட்டத்தில் விஜய்யின் பேச்சில் ஒரு மாற்றம் தெரிந்தது. அதாவது திமுகவை விமர்சித்த அவர் பாஜகவை எந்த சூழலிலும் விமர்சிக்கவே இல்லை, கட்சியின் பெயரை கூட குறிப்பிடவில்லை.
இதற்கு என்ன காரணம் என விசாரணை நடத்திய போது ஒருசில விஷயங்கள் தெரியவந்தன. அதாவது அண்மையில் சென்னையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி வருகை தந்திருந்தார்.
அழைப்பின்பேரில் இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யும் கலந்து கொண்டார். ஏற்கெனவே அரசியலில் நடிகர் விஜய்யின் ரோல் மாடல் ஜெகன்மோகன் ரெட்டிதான் என சொல்லப்படுகிறது.
அதனால்தான் அவரை போலவே காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிகிறார் என சொல்லப்படுகிறது. திருமண விழாவில் ஜெகன் மோகன் ரெட்டிய விஜய் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது சில அரசியல் ஆலோசனைகளை ஜெகன்மோகன் ரெட்டியிடம் விஜய் கேட்டாராம்.
அதாவது ஜனநாயகன் ரிலீஸில் பிரச்சினை, கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஜெகன்மோகன் ரெட்டியிடம் விஜய் வருந்தினாராம். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி, "நீங்கள் தேவையில்லாமல் பாஜகவை சீண்ட வேண்டாம். தவெக ஒரு மாநில கட்சி, தற்போது சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே திமுக மீது மட்டும் எதிர்ப்பு இருக்கட்டும்" என அறிவுறுத்தினாராம்.
இதை விஜய் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இத்தனை அட்வைஸ் செய்த ஜெகன்மோகன் ரெட்டியிடம் விஜய் ஒரு கேள்வி கேட்டாராம். அதாவது, "ஜெகன் அண்ணா, அப்படியே தமிழக எல்லையில் உள்ள ஆந்திர ரெட்டி சமூக மக்களை தவெகவுக்கு ஓட்டு போடுங்கள்" என சொல்லுங்கள் என்றாராம். இதற்கு ஜெகன்மோகன் ரெட்டியும், "சொல்லிட்டா போச்சு" என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
-
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
பல்கலைக்கழக வேந்தராக மீண்டும் ஆளுநர்? முதலமைச்சர் வேண்டாமா? அமைச்சர் கூறியது என்ன? -
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது எதிரியா ஜோசப் விஜய் அவர்களே.. நயினார் கேள்வி -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை











Click it and Unblock the Notifications