விஜய் மாலை போட்ட எம்ஜிஆர் சிலையின் கை கோணிப்பையால் சுற்றப்பட்டு இருந்தது ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் விஜய் செல்லும் போது, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விஜய் மாலை போட்ட எம்ஜிஆர் சிலையின் கை கோணிப்பையால் சுற்றப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிமுகவினர் கோபமடைந்தாலும், எம்ஜிஆர் சிலையில் கை பகுதி கோணியால் சுற்றப்பட்டதற்கான காரணம் என்ன என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக முதல்வர் விஜய், இன்று, பிரச்சாரம் மேற்கொண்டார். மரகதம் குமரவேல் தனது தங்கை என்று கூறி முதல்வர் விஜய் வாக்கு சேகரித்தார்.

MGR Statue

சட்டசபைத் தேர்தலின் போது முதல்வர் விஜய் எந்தவொரு வேட்பாளரின் பெயரையும் கூறவில்லை. முழுக்க முழுக்க விசில் சின்னத்தில் எனக்காக வாக்கு போடுங்கள் என்று மட்டுமே கேட்டுக் கொண்டார். ஆனால் இன்று மரகதம் குமரவேல் பெயரை கூறி, என் தங்கை என்று பேசி வாக்கு சேகரித்தார். இதனால் விஜய்யும், வழக்கமான அரசியலுக்கு மாறி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தையொட்டி அச்சிறுப்பாக்கத்தில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் விஜய் காரில் வரும் வழியில், மதுராந்தகம் நகரப்பகுதியில், திடீரென எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விஜய் மரியாதை செலுத்துவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, தவெகவினர் வேக வேகமாக எம்ஜிஆர் சிலையை சுத்தம் செய்தனர்.

அதேபோல் எம்ஜிஆர் சிலையை பாதுகாப்பு கருவி கொண்டு போலீசார் சோதனையும் செய்தனர். எம்ஜிஆர் சிலையை சோதனை செய்ததை பார்த்த போதே, அதிமுகவினர் கோபமடைந்தனர். இதன்பின் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இருப்பினும் விஜய் மாலை போட்ட எம்ஜிஆர் சிலையின் கை கோணிப்பையால் சுற்றப்பட்டு இருந்தததை பார்த்த அதிமுகவினரும், திமுகவினரும் அதிர்ச்சியடைந்தனர். விஜய்யால் எம்ஜிஆருக்கு அவமரியாதை நடந்துவிட்டது என சமூக வலைத்தளங்களில் கோபத்தை கொப்பளித்தனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக எம்ஜிஆரின் கைகள் கோணிப்பை கொண்டு மூடப்பட்டிருக்கிறது என்று தெரியவந்தது. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்ட மாதிரி ஒரு பதிலாக உள்ளதே என நீங்கள் நினைக்கலாம். அது வேறு ஒன்றும் இல்லை.. எம்ஜிஆர் சிலையின் கை பகுதியில் இரட்டை இலை சின்னம் இருந்துள்ளது. எனவேதான் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி ஏற்கனவே கோணிப்பையால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறைத்து வைத்திருந்தார்களாம். இதுதான் விஷயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+