விஜய் நாளை பதவியேற்க வேண்டும்.. இல்லாவிட்டால் மே 13ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்
சென்னை: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று மாலைக்குள் 118 பேரின் கையெழுத்தை வாங்கி ஆதரவு கடிதத்தை கவர்னிடம் சமர்பித்தால் மட்டுமே நாளை பதவியேற்க முடியும். ஏனெனில் ஆதரவு எம்எல்ஏக்களின் முழுப்பட்டியலை தந்தால்தான் ஆட்சியமைக்க அழைப்புவிடுப்பேன் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் பிடிவாதம் காட்டுகிறார். இந்த சூழலை நாளைய நாளை மிஸ் பண்ணினால், அடுத்து மே 13ம் தேதி தான் முதல்வராக விஜய் பதவியேற்க முடியும்.
மே 7ம் தேதியான இன்றைக்கு விஜய் தமிழ்நாடு முதல்அமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பில்லை. நாளை மாலைக்குள் ஆளுநர் கேட்ட பட்டியலைக் கொடுத்தால் மே 8 அன்று பதவி ஏற்க வாய்ப்பு உண்டு. 8 ராசியில்லாத எண் என்று நினைத்தால், மே 8 அன்றும் பதவி ஏற்பு நடக்காது.

மே 9 - அஷ்டமி - பதவி ஏற்பு நடக்காது.
மே 10 - அஷ்டமி - பதவி ஏற்பு நடக்காது.
மே 11 - நவமி - பதவி ஏற்பு நடக்காது.
மே 12 - செவ்வாய்கிழமை - பதவி ஏற்பு நடக்காது.
அடுத்த வாய்ப்பு மே 13 புதன்கிழமைதான். அன்றைக்கு முகூர்த்தநாள் என்பது கூடுதல் தகவல்.
சிவி சண்முகம் தலைமையில் தவெகவை ஆதரிக்க கணிசமான அதிமுக எம்எல்ஏக்கள் விரும்புவதாக தகவல், புதுச்சேரி தவளை குப்பம் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை இப்போது எட்டியுள்ளது.
அதேநேரம் தமிழக அரசியல் நேற்று ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாகவே மாறியிருக்கிறது. த.வெ.க.விற்கு, காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தந்தஅடுத்த நொடி எல்லாமே தவெகவிற்கு எதிராக மாறியது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு என்பதோடு மட்டுமல்லாமல் இனி நடைபெற உள்ள உள்ளாட்சி, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவை தேர்தல்களிலும் காங்கிரஸுடன் த.வெ.க. கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ஆதரவை தந்துள்ளது.
காங்கிரஸ் ஆதரவு தந்தநிலையில் பா.ம.க. த.வெ.க.வோடு சேர்ந்துவிடும். அந்த அமைச்சரவையில் சௌமியா அன்புமணி சேர்ந்து விடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேற்று திடீரென்று அன்புமணி ராமதாஸ் எந்த கருத்தையும் இது தொடர்பாக சொல்லாமல் நன்றி வணக்கம் என்று மட்டும் கூறிவிட்டு சென்றுவிட்ர்.. அதாவது பா.ம.க. த.வெ.க.வுடன் சேர கூடாது. அதற்கு ஈடாக அன்புமணி ராமதாஸ்க்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற பேரம் பேசப்பட்டதால் பா.ம.க. இப்போது த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகிறது.
அதேபோல் காங்கிரஸ் ஆதரவால் அப்செட்டான அதிமுக, நேற்று ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து களம் தவெகவிற்கு எதிராக மாறத்தொடங்கியது. ஏனெனில் த.வெ.க.விற்கு ஆதரவு கொடுப்பது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டு அதில் முடிவு எடுக்கப்படும் என்று நேற்று காலை திருமாவளவன் கூறியிருந்த நிலையில், இந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாலையில் அறிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணியை விட்டு செல்ல விசிக தயங்குவதாக கூறப்படுகிறது. இடதுசாரிகளின் நிலைப்பாட்டை பொறுத்தே முடிவு செய்யப்படும் என விசிக கூறியுள்ளது. இடதுசாரிகளோ திமுக கூட்டணியை விட்டு செல்ல வாய்ப்பே இல்லை என்கிற மனநிலையில் இருக்கிறார்களாம்.
அதேநேரம் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். அதிமுகவில் இருந்து கணிசமானோர் தவெகவிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் புதுச்சேரி தவளைக்குப்பம் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து, அதன் பின்னர் மெஜாரிட்டியை நிரூபிக்க சொன்னால் தவெக எளிதாக மெஜாரிட்டியை நிரூபித்துவிடும்.
ஆனால் ஆளுரோ 117 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் வந்தால் தான் பதவியேற் அனுமதிக்க முடியும் என்று கூறுகிறார்.இது தான் சிக்கல். இந்த முடிவினை எதிர்த்து உடனடியாக தவெக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளது. பொதுவாக இதுபோன்ற சூழலில் தனிப்பெரும்கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆளுநர் மறுக்க முடியாது. ஆனால் ஆளுநர் மறுப்பதால், உச்ச நீதிமன்றத்தை நாட தவெக முடிவு செய்துள்ளது. அடுத்த ஒருவாரம் கூவத்தூர் பாணி அரசியல் அரங்கேறுவது உறுதியாகி உள்ளது. அதேநேரம் காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது தான் சிக்கலுக்கு காரணம் என்கிறார்கள்.














Click it and Unblock the Notifications