கேட்டை திறந்த விஜய்..ஒவ்வொரு செங்கலா உருவும் செங்கோட்டையன்! தவெகவுக்கு தாவும் ’தங்க’’இனிஷியல்’ மாஜி?
சென்னை: தமிழக கட்சி கழகத்தில் இணைந்து இருக்கிறார் அதிமுக முன்னால் அமைச்சர் செங்கோட்டையன். கட்சியில் பெரிய பொறுப்புகள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அதிருப்தி அதிமுகவினரை அழைத்து வரும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சேர்ந்த உடனேயே அதிரடியாக இரண்டு முன்னாள் அமைச்சர்களுடன் பேசியதாக சொல்லப்படுகிறது. 'தங்கமான' முன்னாள் அமைச்சர், டெல்டா மாவட்டத்தை சேர்ந்த 'இனிஷியல்' முன்னாள் அமைச்சரும் செங்கோட்டையனிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழக அரசியல் சூழலில் சமீபத்தில் பெரிய பரபரப்பை உருவாக்கிய சம்பவம் என்றால், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செய்தி. நீண்டகாலம் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த செங்கோட்டையன், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு எந்தக் கட்சியில் சேரப் போகிறார் என்ற ஆர்வம் அரசியல் வட்டாரத்தில் நீண்டநாள் நிலவியது.
அந்த எதிர்பார்ப்பு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. செங்கோட்டையன் விஜய்யுடன் கைகோர்த்தவுடன், தவெகவின் தடுப்புக் கதவு திறக்கப்பட்டுவிட்டதாகவே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தவெக, பெரிய தலைவர்கள் சேராத கட்சி என்ற விமர்சனத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

செங்கோட்டையன்
இதற்கு முக்கிய காரணமாகப் புஸ்ஸி ஆனந்தின் அணுகுமுறை சொல்லப்பட்டு வந்தது. அவரது நெருக்கமான அணுகுமுறையால் அனுபவம் மிக்க அரசியல்வாதிகள் கூட விஜய்யை நேரடியாகச் சந்திக்க முடியாத நிலை உருவாகி, கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தவெகவின் அமைப்புக் குறைபாடுகள் காரணமாக, முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி, டேவிட் செல்வின், ஸ்ரீதர் போன்றோர் கூட கட்சிக்குள் முக்கியத்துவம் பெறாமல் இருந்தனர். இதனால், புதிய தலைவர்கள் இணைய ஆர்வம் குறைந்து விட்டது.
விஜய் தவெக
மேலும், விஜய்யின் கூட்டங்கள் எங்கு சென்றாலும் ஆயிரக்கணக்கில் திரண்டாலும், அதை வாக்குகளாக மாற்றக்கூடிய 2-ஆவது கட்ட தலைவர்கள் என்பதும் பெரிய பலவீனமாகக் கூறப்பட்டது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு, ''திரையுலகப் பிரபலத்தால் மட்டும் அரசியல் பயணம் சாத்தியமல்ல'' என்பதை விஜய் புரிந்துகொண்டதாக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அதோடு, திமுகவை விமர்சிப்பதோடு மட்டுமல்ல, பாஜகவைப் பற்றியும் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன்மூலம் தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஈர்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக அரசியல் ஆலோசகர்கள் விஜய்யை நம்ப வைத்தார்கள்.
தவெக வளர்ச்சி
இந்த சூழ்நிலையில், செங்கோட்டையன் தவெக-வில் இணைவது கட்சிக்குப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். அவருக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவி, வழிகாட்டும் குழுத் தலைவர் பதவி போன்ற பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது முக்கியமாக, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, அதிருப்தியாளர்களை சமரசப்படுத்துதல் போன்ற முக்கிய பொறுப்புகள் செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்படலாம்.
ஜெயலலிதா
ஜெயலலிதா காலத்தில் அவர் செய்த அரசியல் ஒருங்கிணைப்பு, கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் எதிா்க்கட்சித் தலைவர்களை வளைத்துக் கொண்டுவரும் திறன் போன்றவை இப்போது விஜய்க்கு மிக அவசியமானவை. பிகாரில் பிரசாந்த் கிஷோர் தலைமையில் ஜன் சுராஜ் பெற்ற வெறும் 3.28% வாக்குகள், பிரபலத்தால் மட்டும் அரசியல் வெற்றி உறுதி செய்ய முடியாது என்பதை விஜய்க்கு உணர்த்தியதாகவும் கூறப்படுகிறது.
தங்க மாஜி
செங்கோட்டையன் சேர்வதால், அதிமுக அதிருப்தியாளர்கள் தவெகவுக்கு நகரும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. ஏற்கனவே தங்கமான மாஜியும், டெல்டா பகுதியைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரும் செங்கோட்டையனுடன் உரையாடியதாக தகவல் வெளிவந்துள்ளது. அதிமுக - தவெக கூட்டணி உருவாகாமல் இருக்க சில அரசியல் சக்திகள் முயற்சி செய்தாலும், செங்கோட்டையனின் வரவு தவெகவுக்குப் புதிய அடையாளத்தையும், அவருக்கே புதிய அரசியல் முகவரியையும் கொடுத்துள்ளது. அரசியல் தரப்பிலிருந்து பார்க்கும் போது தவெக திறக்கப்பட்டுவிட்டது. இப்போது பனையூருக்கு படையெடுக்க காத்திருப்பவர்கள் பலர். செங்கோட்டையனின் அடுத்த அரசியல் அசைவுகள் எடப்பாடிக்கு எதிராக தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
-
உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் வெடித்து பேசிய மேயர் பிரியா! -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்! -
"எதே ராகவா லாரன்ஸா.. அடேய் விஷால் நீயும் கட்சி ஆரம்பி" தெறிக்கும் அரசியல் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications