டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகின்றன. திமுக கூட்டணியே வெற்றியை பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு டெல்டா மற்றும் வடக்கில் முட்டை தொகுதிகள் தான் கிடைக்கும் என புது கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தமாக விஜய்யின் தவெக எத்தனை சீட்களில் வெற்றி பெறும் என பலரும் எதிர்ப்பார்த்து வரும் நிலையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தவெக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியினை கொடுத்துள்ளது. மொத்தமாக 14 சதவீத வாக்குகள் வரை மட்டுமே அந்த கட்சி வாங்கும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டியுள்ளன.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறது. விசிக, காங்கிரஸ் என பல கட்சிகளை கூட்டணியில் சேர்க்க நினைத்த விஜய் கட்சி கடைசியில் தனித்து விடப்பட்டது. கூட்டணிக்கு யாரும் வராததால் தவெக தமிழகம் முழுக்க 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தேர்விலும் அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
புதுவையில் 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள விஜய் விரைவில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளாராம். திமுக, அதிமுக, நாதகவும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. நாதக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து விட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இப்படியாக தமிழக அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
தவெக எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்து யார் வெற்றி பெறுவார், எந்த கட்சி ஆட்சி அமைக்கும், புதிதாக களம் கண்டுள்ள விஜய் வெற்றி பெறுவாரா என பலரும் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள். இதற்காக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளையும் எதிர்பார்த்து காத்து உள்ளனர். அந்த வகையில் பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் சி.என்.என் தற்போது கருத்துக் கணிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின்படி திமுக வரும் தேர்தலில் ஜஸ்ட் மிஸ்சில் ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவித்துள்ளது. இதேபோன்று அதிமுக டஃப் பைட் கொடுக்கும் எனவும், விஜய்யின் தவெக 2 முதல் 8 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கணித்து உள்ளது. திமுக கூட்டணி 113 முதல் 123 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 106 முதல் 116 வரை வெல்லக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மற்றும் வடக்கில் முட்டை தான்
மேற்கு, சென்னை, வடக்கு, தெற்கு, கிழக்கு என பார்க்கும் போது புதிதாக களம் கண்டுள்ள விஜய்க்கு டெல்டா மற்றும் வடக்கில் ஒரு இடம் கூட கிடைக்காது என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 முதல் 4 இடங்களில் தவெக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும், தெற்கு மற்றும் மேற்கில் தலா 2 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமாகவே தவெக 2 முதல் 8 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளதாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.
திமுக, அதிமுகவுக்கு எத்தனை?
திமுக அதிமுக விஜய்
சென்னை (37 தொகுதிகள்) - 23 - 25 9 - 11 2 - 4
வடக்கு (52 தொகுதிகள்) - 20 - 22 30 - 32 0 - 0
டெல்டா (37 தொகுதிகள்) - 26 - 28 9 - 11 0 - 0
மேற்கு (50 தொகுதிகள்) - 11 - 13 36 - 38 0 - 2
தெற்கு (58 தொகுதிகள்) - 33 - 3 5 22 - 24 0 - 2
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications