வேகமெடுக்கும் விஜய் மக்கள் இயக்கம்! கட்சிப்பதிவு,மாநாடு என நிர்வாகிகள் பாய்ச்சல்! ஸ்ட்ராங் ஐடி விங்!
சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் கள அரசியலை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றன.
கடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் திமுக, அதிமுக, வேட்பாளர்களுக்கே கடும் டஃப் கொடுத்தனர். நடிகர் விஜய் பிரச்சாரத்துக்கு செல்லாமலேயே அவரது படத்தையும் கொடியையும் மட்டுமே பயன்படுத்தி இந்த வெற்றியை அவர்கள் சாத்தியப்படுத்தினர்.

இதனிடையே இன்னும் ஒரு மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் நடவடிக்கைகளை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மிகவும் கூர்மையாக கவனித்து வருகின்றன. சென்னை பனையூரில் வைத்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து வருகிறார் நடிகர் விஜய். அதுமட்டுமல்ல நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறார் விஜய்.
இதன் மூலம் தமது அரசியல் பிரவேசத்தை சூசகமாக உணர்த்த ஆரம்பித்துள்ளார் விஜய். இதனிடையே விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறவுள்ளது என்றும் மாநாடு நடத்தப்படவுள்ளது எனவும் ஒரு தகவல் உலா வந்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே ஐடி விங்கின் அவசியம் குறித்து அறிந்து வைத்துள்ள நடிகர் விஜய், அதன் மீதும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் கூட ஐடி விங்கை வலிமைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விஜய் மக்கள் இயக்கத்திற்கு கடந்த அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், கூகுள் ப்ளே ஸ்டோரில் தனி ஆப், என சமூகவலைதளப் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications