மதுரை தவெக மாநாட்டில் கொடி கம்பம் சாய்ந்து கார் சேதம்! புதிய கார் தர விஜய் உறுதி!
சென்னை: மதுரை தவெக மாநாட்டில் 100 அடி கம்பத்தை நடும் போது அது அப்படியே சாய்ந்ததில் இன்னோவா கார் சேதமடைந்த நிலையில் புதிதாக அதே நிறுவன காரை வாங்கித் தருவதாக தவெக தலைவரும் நடிகருமான விஜய் உறுதி அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இது அக்கட்சியின் 2ஆவது மாநில மாநாடு ஆகும். இந்த மாநாட்டுக்காக 100 அடி உயர கொடி கம்பம் நடும் பணிகள் நடந்தன.
அதாவது மாநாட்டுக்கு ஒரு நாள் முன்பு இந்த பணிகள் நடந்தன. இந்த மாநாட்டுக்காக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தி கிராமத்தில் 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங் இடங்கள், ஒன்றரை லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன.
முதல் மாநாட்டை போல் இந்த 2ஆவது மாநாட்டின் முகப்பிலும் 100 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு மாநாடு தொடங்கும் போது அதை தவெக தலைவர் விஜய் ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக 30 டன் எடையை தாங்கும் ராட்சத கிரேன் மூலம் கொடிக் கம்பத்தை நிறுத்த நிர்வாகிகள் முயன்றனர். அப்போது கிரேனின் பெல்ட் அறுந்து கொடிக் கம்பம் கீழே சாய்ந்தது. இதில் கம்பம் இரண்டாக உடைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிர்வாகியின் இன்னோவா கார் மீது விழுந்து கார் கடுமையாக சேதமடைந்தது.
எனினும் காரில் யாரும் இல்லாததால் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. சேதமடைந்த கார், கொடிக் கம்பம் அகற்றப்பட்டு மாநாடும் நடைபெற்றது. இந்த நிலையில் நிர்வாகிக்கு புதிய இன்னோவா கார் வாங்கித் தரப்படும் என விஜய் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்!












Click it and Unblock the Notifications