பொது சொத்துகளை சேதமாக்கிய தவெகவினர்! விஜய் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தை பாருங்க.. பாயும் நடவடிக்கை?
சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் சென்னையில் இன்று தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகர் விஜய் பங்கேற்று முதல்வர் ஸ்டாலினை கடுமையாக கண்டித்து பேசினார். இந்நிலையில் தான் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தவெக தொண்டர்கள் சாலையின் நடுவே உள்ள தடுப்பு வேலிகளை சேதமாக்கி உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித் குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கினர். நிகிதா என்ற பெண் கொடுத்த திருட்டு புகாரில் அஜித் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரை தனிப்படை போலீசார் தாக்கினர். இதில் அஜித் குமார் இறந்தார்.

அஜித்குமாரை போலீசார் தாக்கியது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் கைத செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் சென்று அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதேபோல் திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணையின்போது இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக காவல்துறை விசாரணையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு தவெகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சிவானந்தா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார். கட்சி தொடங்கிய பிறகு அவர் முதல் முறையாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அதில் சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்ற பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது விஜய், முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சிவானந்த சாலையில் உள்ள பொதுச்சொத்துகளை தவெகவினர் சேதப்படுத்தி உள்ளதாக பரபரப்பான புகார் எழுந்துள்ளளது. அதாவது சென்னை மாநகராட்சி சார்பில் சாலையில் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரின் மீது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதேபோல் அந்த தடுப்புச்சுவருக்கு நடுவே செடிகள் வைக்கப்பட்டு இருந்தது. தவெக ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு அந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகள் மற்றும் செடிகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு தடுப்பு கம்பிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜயை பார்க்க தொண்டர்கள் அந்த கம்பிகளை ஏறி குதித்ததாகவும், அப்போது அந்த கம்பிகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் போலீசார் பயன்படுத்தும் பேரிகார்டுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம், போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தவெக தொண்டர்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் பொதுச்சொத்துகளை சேதமாக்கிய புகாரில் அவர்கள் மீது நடவடிக்கை பாய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications