Vijay: ”ஸ்டாலின் அங்கிள்” விஜயின் தராதரம் அவ்வளவுதான்.. 50 பேர் கூடினால்.. திமுக கடுமையான அட்டாக்
சென்னை: முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என விஜய் (Vijay - CM Stalin) பேசியது தரம் தாழ்ந்த செயல் என்று அமைச்சர் கே என் நேரு கூறியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார். மேலும் அவர், முதல்வர் குறித்த தரம் தாழ்ந்த பேச்சுக்கு வரும் தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள் எனவும், 50 பேர் கூடிவிட்டால் அவர் பேசுவது எல்லாம் எப்படி சரியாக இருக்கும்? என்றும் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தில் 2-வது மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், மீண்டும் கொள்கை எதிரி பாஜக எனவும், அரசியல் எதிரி திமுக என்பதையும் குறிப்பிட்டார். மேலும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

ஸ்டாலினை விமர்சித்த விஜய்
ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.. கபட நாடகமாடும் திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்.. என்றும் விஜய் பேசினார். குறிப்பாக ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு விஜய் பேசினார். விஜய் பேசுகையில், "இப்போது ஆட்சியில் இருக்கின்ற வெற்று விளம்பர மாடல் ஆட்சி என்ன செய்கிறது என்று தெரியுமா.. பாஜகவோடு உள்ளுக்குள்ள ஒரு உறவை வைத்துக்கொண்டு, வெளியே எதிர்க்கிற மாதிரி ஒரு டிராமா பண்ணிட்டு இருக்காங்க..
எதிர்க்கட்சியாக இருந்தால் போங்க மோடி என்று பலூன் காட்டுவதாகவும், இதே ஆளுங்கட்சியாக இருந்தால் வாங்க மோடி என்று குடைபிடித்து கும்பிடு போடுவார்கள்.. இது மட்டுமா.. ரெய்டுன்னு ஒன்னு வந்துட்டா போதும்.. இதுவரை ஒரு முறை கூட போகாத கூட்டத்துக்கு கூட அத காரணம் காட்டி டெல்லிக்கு போயி சீக்ரெட் மீட்டிங் நடத்துவார்கள்.. "ஸ்டாலின் அங்கிள்.. வாட்ஸ் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள்.."
சொல்லுங்க மை டியர் அங்கிள்
தமிழ்நாட்டில் இப்படி அவலமாக ஒரு ஆட்சி நடக்கின்ற போது எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்.. ஒரு தவறு செய்தால்.. அதை தெரிந்து செய்தால்.. (என்ற பாடலை பாடி) அவர் கபட நாடக மு.க ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும்.. "அங்கிள்.. அங்கிள்.. உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்துச்சுன்னா.. நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க அங்கிள்.. நீங்கள் நடத்துகிற ஆட்சியில் நேர்மை இருக்கா..
நியாயம் இருக்கா.. ஊழல் இல்லாமல் இருக்கா.. சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா.. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா.. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கா.. இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா.. சொல்லுங்க மை டியர் அங்கிள்.. என்று விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் இதற்கு திமுக அமைச்சர் கே என் நேரு பதில் அளித்துள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய்யின் தராதரம் அவ்வளவு தான் என்று பேசினார்.
அமைச்சர் கேர் என் நேரு பதில்
அமைச்சர் கே என் நேரு கூறியதாவது:- 40 ஆண்டு காலம் அரசியலில் இருப்பவரை அங்கிள் என விஜய் பேசியது தரம் தாழ்ந்த செயல்.. அவ்வளவு தான்.. ஒரு மாநிலத்தோடு முதல்வர்.. பெரிய கட்சியோட தலைவர்.. நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு, அவரை அப்படி சொல்லியிருப்பது அவரது தரம் தாழ்ந்த செயலாகத் தான் இருக்கும்.
இதற்கு மக்கள் பதில் சொல்வார்கள்.. நாங்களும் வரும் தேர்தலில் பதில் சொல்வோம். 10 பேர், 50 பேர் கூடிட்டாங்கன்னா ஒரு மாநில முதல்வரை எப்படி வேண்டும் என்றாலும் பேசலாம் என்பது எப்படி சரியாக இருக்கும்?.. இவ்வாறு அமைச்சர் கே என் நேரு கூறினார்.












Click it and Unblock the Notifications