Convoy: முதல்வருக்கான பாதுகாப்பு கான்வாய்கள் வாபஸ் ஏன்? வி.எஸ்.பாபு பரபரப்பு விளக்கம்
சென்னை: முதல்வருக்கான பாதுகாப்பு கான்வாய்கள் வேண்டாம் என தவெக தலைவர் விஜய்தான் சொன்னார் என கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார். மேலும் விஜய் தலைமையில் நிச்சயம் ஆட்சி அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெகவுக்கு 108 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர். இதனால் தவெக ஆட்சி அமையும் நிலை இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான போது விஜய் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்ததால் அவரது நீலாங்கரை வீட்டில் ரசிகர்களும் தொண்டர்களும் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியை கொண்டாடினர்.

அது போல் கடந்த 4ஆம் தேதி முதலே விஜய்யின் பாதுகாப்புக்கு கான்வாய் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அவரது கட்சி அலுவலகத்திற்கு மெட்டல் டிடெக்டர் கருவிகள் வைக்கப்பட்டன.
விஜய்யை சட்டசபை குழுத் தலைவராக தேர்வு செய்ய பனையூருக்கு வந்த தவெக எம்எல்ஏக்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதையடுத்து, நேரம் ஆக ஆக நீலாங்கரையில் விஜய் வசிக்கும் பகுதியில் வீடு இருப்போரின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததை அடுத்து அதன் பலம் 112 ஆக உயர்ந்தது. இதை வைத்துக் கொண்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார் விஜய்.
அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு 2 வாரம் கால அவகாசம் கொடுக்குமாறும் விஜய் கேட்டார். இதற்கு ஆளுநர் 2 நாட்கள் அவகாசம் தந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் பட்டினம்பாக்கம் இல்லத்தில் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு நீலாங்கரைக்கு புறப்பட தயாரானார்.
அப்போது அவருக்கு பாதுகாப்பு வந்த கான்வாய் வாகனங்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி சென்றுவிட்டன. அங்கு பாதுகாப்பு பணிக்காக இருந்த 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும் சென்றுவிட்டனர்.
இதையடுத்து விஜய் தனியாக தனது காரில் ஏறி நீலாங்கரை வீட்டிற்கு வந்தார். அங்கும் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் நீக்கப்பட்டிருந்தன. இதனால் தவெகவினருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. மேலும் விஜய் முதல்வராவதில் சிக்கல் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு கூறியிருப்பதாவது: முதல்வருக்கான பாதுகாப்பு வாகனங்கள் வேண்டாம் என சொன்னதே விஜய்தான். நிச்சயம் விஜய் ஆட்சி அமைப்பார் என தெரிவித்துள்ளார்.
-
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
பள்ளிகள் திறப்பு எப்போது? வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
ஆட்சிக்கு வந்த 15வது நாளிலேயே.. விஜய்யின் ஆபரேஷன் விசில்! பாஜக ஸ்டைல்! தூக்கப்பட்ட அதிமுக MLAக்கள் -
‘குடும்பம் முக்கியம் என்பதை நீங்க காட்டணும்’.. பதவியேற்பில் நடந்த சம்பவம்.. முதல்வர் விஜய்க்கு சமுத்திரக்கனி அறிவுரை -
நான் அரசியல்ல 15 வருஷமா இருக்கேன்! என்ன யூஸ்? விஜய் மீது பொறாமையா இருக்கு! ஓபனாக சொன்ன பவன் கல்யாண் -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
விஜய் மனசு வைக்கனும்.. நியூஸை கேட்டதும் ஷாக் ஆகும் மக்கள்! பெட்ரோலால் எகிறுது பிபி.. குறையுமா ’வாட்’ -
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
நகராட்சி டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்: தமிழ்நாடு அரசு அதிரடி! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ











Click it and Unblock the Notifications